FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

மகுடம் படத்தின் காத்தாக வாழப்போறோம் பாடல் வெளியானது!

மகுடம் படத்தின் காத்தாக வாழப்போறோம் பாடல் வெளியானது பற்றி...

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 7:31 pm IST
மகுடம் படத்தின் பாடல். - படம் - எக்ஸ்
பகிர்:

மகுடம் படத்தின் காத்தாக வாழப்போறோம் பாடல் இன்று (ஆக. 5) வெளியானது.

சூப்பர் குட் பிலிம்ஸின் 99-வது படமாக உருவாகும் 'மகுடம்’ படத்தின் மூலம் நடிகர் விஷால் இயக்குநராக அறிமுகமாகிறார். இதில் துஷாரா விஜயன், அஞ்சலி, ஜான் விஜய் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்தில் விஷால் கேங்ஸ்டராக நடித்துள்ளார். இயக்குநராகும் தனது 30 ஆண்டுகால கனவு இப்படத்தின் மூலம் நிறைவேறியதாக விஷால் கூறியிருந்தார்.

Advertisement

Advertisement

இந்தப் படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள நிலையில், படத்தின் நான்காவது பாடலான ‘காத்தாக வாழப்போறோம்’ இன்று வெளியாகியுள்ளது.

சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனர் ஆர்.பி. சௌத்ரி சமீபத்தில் காலமான நிலையில், அவர் படப்பிடிப்பு தளத்தில் இருந்தபோது எடுத்த காட்சிகளும் இந்தப் பாடல் விடியோவில் இடம்பெற்றுள்ளது.

இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

The song "Kaathaga Vaazhaporom" from the movie Magudam was released today (Aug. 5).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments