நிவின் பாலி, அஞ்சலி, சூரியின் ஏழு கடல் ஏழு மலை! புதிய பாடல் வெளியீடு!
ஏழு கடல் ஏழு மலை படத்தின் புதிய பாடல் வெளியாகியுள்ளது...
நடிகர்கள் சூரி, அஞ்சலி மற்றும் நிவின் பாலி இணைந்து நடித்துள்ள “ஏழு கடல் ஏழு மலை” படத்தின் “நமக்காய் ஒரு வானம்” பாடல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் ராம் இயக்கத்தில் நடிகர்கள் நிவின் பாலி, சூரி மற்றும் அஞ்சலி ஆகியோர் இணைந்து நடித்துள்ள புதிய படம் “ஏழு கடல் ஏழு மலை”. இப்படம் நெதர்லாந்து நாட்டில் நடைபெற்ற “ரோட்டர்டம் சர்வதேச திரைப்பட விழாவில்” திரையிடப்பட்டு பாராட்டுகளைப் பெற்றது.
புதுமையான கதைகளத்தால் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ள இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இந்தப் படத்தின் “நமக்காய் ஒரு வானம்” எனும் பாடலை இன்று (ஆக. 7) மாலை படக்குழு வெளியிட்டுள்ளது. பாடலாசிரியர் மதன் கார்க்கி எழுதிய இப்பாடலை யுவன் சங்கர் ராஜா மற்றும் நடிகை ஆண்ட்ரியா ஆகியோர் பாடியுள்ளனர்.
ஏற்கெனவே, “ஏழு கடல் ஏழு மலை” படத்தின் டீசர், டிரைலர் உள்ளிட்டவை வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், இப்படம் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
The song "Namakkai Oru Vaanam" from the movie Yezhu Kadal Yezhu Malai , starring Soori, Anjali, and Nivin Pauly, has been released.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.