ஸ்பிரிட் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு! உடற்பயிற்சியில் பிரபாஸ்!
பிரபாஸ் நடிக்கும் ஸ்பிரிட் திரைப்படத்தின் அப்டேட்...
நடிகர் பிரபாஸ் நடிக்கும் ஸ்பிரிட் திரைப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நாயகனாக நடிக்கும் ஸ்பிரிட் திரைப்படம் பெரிய பட்ஜெட்டில் பான் ஆசிய திரைப்படமாக உருவாகி வருகிறது.
இப்படத்தின் நாயகியாக முதலில் நடிகை தீபிகா படுகோன் ஒப்பந்தம் செய்யப்பட்டார். பின், தீபிகா விதித்த நிபந்தனைகள் தயாரிப்பு நிறுவனத்திற்கு ஒத்து வராததால் நடிகை டிருப்தி திம்தி ஒப்பந்தம் தேர்வு செய்யப்பட்டார்.
Advertisement
Advertisement
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்தாண்டு மார்ச் மாதம் வெளியாகவுள்ளதால் தயாரிப்பு பணிகளில் தொய்வில்லாமல் செல்கிறது.
இதில், பிரபாஸ் காவல்துறை அதிகாரியாகவும் பிளாஷ்பேக் காட்சிகளில் கல்லூரி மாணவராகவும் நடித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாகவும் இதற்காக உடலைக் கட்டுமஸ்தாக மாற்றும் பயிற்சியில் பிரபாஸ் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
Information has emerged regarding the next phase of filming for the movie Spirit, starring actor Prabhas.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.