நெட்பிளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட திரைப்படமானது துரந்தர்!
நெட்பிளிக்ஸ் ஓடிடியில் அதிகம் பார்க்கப்பட்ட திரைப்படமான துரந்தர்...
நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் உருவான துரந்தர் நெட்பிளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட திரைப்படமானது.
ஆதித்யா தார் இயக்கத்தில் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் உருவான துரந்தர் - 2 திரைப்படம் உலகம் முழுவதும் கடந்த மார்ச் 19 அன்று தேதி திரையரங்குகளில் வெளியானது.
இப்படத்தின் முதல் பாகம் ஹிந்தி மொழியில் மட்டும் வெளியாகி ரூ.1,300 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இதனைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகி 2,000 கோடி வசூலைத் தொட்டது.
Advertisement
Advertisement
தொடர்ந்து, ஜூலை 10 ஆம் தேதி ஜப்பானில் 80 திரையரங்குகளில் துரந்தர் வெளியானது. ஆனால், இப்படத்துடன் ரசிகர்களால் ஒன்ற முடியாததால் டிக்கெட் விற்பனையில் மந்தம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்த நிலையில், நெட்பிளிக்ஸ் ஓடிடியில் இப்படம் ஆங்கிலம் அல்லாத திரைப்படப் பிரிவில் உலகளவில் அதிகம் பார்க்கப்பட்ட திரைப்படம் என்கிற சாதனையைப் படைத்துள்ளது. இதனை, நெட்பிளிக்ஸ் தலைமை அறிவித்திருப்பதால் துரந்தர் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றன
Durandhar, starring actor Ranveer Singh, became the most-watched movie on Netflix.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.