மீண்டும் ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் சிங்?
மீண்டும் இணையும் துரந்தர் கூட்டணி...
இயக்குநர் ஆதித்யா தர் இயக்கத்தில் நடிகர் ரன்வீர் சிங் மீண்டும் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஆதித்யா தார் இயக்கத்தில் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் உருவான துரந்தர் - 2 திரைப்படம் உலகம் முழுவதும் கடந்த மார்ச் 19 அன்று தேதி திரையரங்குகளில் வெளியானது.
Advertisement
Advertisement
இப்படத்தின் முதல் பாகம் ஹிந்தி மொழியில் மட்டும் வெளியாகி ரூ.1,300 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இதனைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகி ரூ. 2,000 கோடி வசூலைத் தொட்டது.
உலக அளவில் பலரையும் ஆச்சரியப்படுத்திய இப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ஆதித்யா தர் மீண்டும் நடிகர் ரன்வீர் சிங்கை வைத்து புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்படம் 2028 ஆம் ஆண்டின் இறுதியில் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.