FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

கௌரி கிஷனுடன் பயணிக்கும் பல பெண்கள்! ‘தாரகை’ முதல் தோற்ற போஸ்டர்!

கௌரி கிஷன் நாயகியாக நடிக்கும் புதிய திரைப்படம்...

Updated On : 19 ஆகஸ்ட் 2026, 4:44 pm IST
கௌரி கிஷன்
பகிர்:

நடிகை கௌரி கிஷன் நாயகியாக நடிக்கும் திரைப்படத்தின் தோற்ற போஸ்டர் வெளியாகியுள்ளது.

ஸ்பீட் ரீல்ஸ் ஸ்டுடியோவின் முதல் தயாரிப்பாக உருவாகி வரும் திரைப்படம் ‘தாரகை’. இப்படத்தை க்ரிஷ் எழுதி இயக்குகிறார். கதையின் நாயகியாக கௌரி கிஷன் நடிக்கிறார். காளி வெங்கட், ஸ்ரீமன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

பெண்களின் வாழ்க்கை, பயணம் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் சூழல்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement

கௌரி கிஷனின் முகத்தை மையமாகக் கொண்டு, அவரைச் சுற்றிலும் வெவ்வேறு வயது மற்றும் பின்னணியைச் சேர்ந்த பல பெண்கள் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த போஸ்டர், படத்தின் கதைக்களம் குறித்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘தாரகை’ படத்திற்கு சித்து குமார் இசையமைக்கிறார். சுந்தர் சுகுமாரன் ஒளிப்பதிவு செய்ய, அலன் பி. ஜான் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். அருண் சங்கர் கலை இயக்குநராக பணியாற்றுகிறார்.

ஒரு பெண்ணின் பயணத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘தாரகை’, பயணம், உறவுகள், வாழ்க்கைத் தேர்வுகள் மற்றும் சுதந்திரம் குறித்த கேள்விகளை முன்வைக்கும் படமாக உருவாகி வருகிறது.

The first-look poster of the film starring actress Gouri Kishan as the female lead has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments