FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஒரு புதுமையும் இல்லை... புலம்பும் நடிகர் பிருத்விராஜ் ரசிகர்கள்!

கலிஃபா திரைப்படம் விமர்சனங்களைப் பெற்று வருகிறது...

நடிகர் பிருத்விராஜ்
பகிர்:

நடிகர் பிருத்விராஜ் நடிப்பில் உருவான கலிஃபா கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது.

நடிகர் பிருத்விராஜ் நடிப்பில் உருவான புதிய ஆக்சன் திரைப்படமான கலிஃபா ஓணம் பண்டிகையை முன்னிட்டு இன்று திரையரங்குகளில் வெளியானது. டர்போ திரைப்படத்தை இயக்கிய வைசாக் இப்படத்தை இயக்க, ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார்.

தங்கக் கடத்தலைப் பின்னணியாகக் கொண்டு நாயகனுக்கும் கேங்ஸ்டருக்குமான கதையாக உருவான இப்படத்தின் டீசர், டிரைலர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. மேலும், சிறப்பு தோற்றத்தில் நடிகர் மோகன்லாலும் நடித்துள்ளதால் ரசிகர்கள் ஆவலுடன் இன்றைய வெளியீட்டைக் கண்டனர்.

Advertisement

Advertisement

ஆனால், கதையாக இப்படம் பழைய பாணியில் இருந்ததாகவும் ஆக்‌ஷன் காட்சிகளில் எந்தப் புதுமையும் இல்லை என்றும் பிருத்விராஜ் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். மேலும், இரண்டாம் பாதி சண்டைக் காட்சி நன்றாக இருந்ததாகவும் மோகன்லால் வருகை திரைக்கதை சொதப்பலால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றும் கூறுகின்றனர். இதனால், கலவையான விமர்சனங்களே கிடைத்திருப்பதால் ஓணம் வெளியீட்டில் பெரிய தாக்கத்தை கலிஃபா ஏற்படுத்தாது என்றே தெரிகிறது.

பிருத்விராஜ் நடிப்பில் இறுதியாக வெளியான விலாயத் புத்தா மற்றும் ஐ, நோபடி ஆகிய திரைப்படங்கள் வணிக வெற்றியைப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Khalifa, starring Prithviraj, is receiving mixed reviews.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments