FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

நடிகர் பிருத்விராஜின் ஐ, நோபடி திரைப்பட ஓடிடி தேதி!

ஐ, நோபடி திரைப்பட ஓடிடி தேதி அறிவிப்பு...

Updated On : 16 ஆகஸ்ட் 2026, 3:56 pm IST
பகிர்:

நடிகர் பிருத்விராஜ் நடிப்பில் உருவான ஐ, நோபடி திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் பிருத்விராஜ் நடிப்பில் வெளியான விலாயத் புத்தா திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றதால் ஐ, நோபடி திரைப்படம் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

நிஷம் பஷீர் இயக்கத்தில் அதிரடியான சண்டைக்காட்சிகளுடன் இப்படம் உருவாகியிருந்தாலும் கதை பலவீனத்தால் பெரிய வெற்றியைப் பெறவில்லை. இதில், நாயகியாக பார்வதி திருவோத்து நடிக்க, வங்கியை மையமிட்ட கதையாக இது எடுக்கப்பட்டிருந்தது.

Advertisement

Advertisement

ஆக்சன் காட்சிகள் நன்றாகப் பேசப்பட்டாலும் உணர்வுகள் சரியாகக் கடத்தப்படாதது ஏமாற்றமாக அமைந்ததாக விமர்சனங்களும் வந்தன.

இதனால், ஜூலை 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் ரூ. 15 கோடியை மட்டுமே வசூலித்தது. இந்த நிலையில், ஐ, நோபடி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வருகிற ஆக. 25 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, நடிகர் பிருத்விராஜ் இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் வாரணாசி படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

The OTT release date for the film i, Nobody, starring actor Prithviraj, has been announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments