அடுத்தடுத்து தெலுங்கு இயக்குநர்களுக்கு வெற்றி கொடுத்த ஜிவி பிரகாஷ்!
ஜிவி பிரகாஷ் இசையமைத்த புதிய படங்கள் வெற்றி பெற்றுள்ளன...
இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்த திரைப்படங்கள் தெலுங்கில் வெற்றி பெற்றுள்ளன.
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் ஜிவி பிரகாஷ். 100 திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்தவர் என்பதால் தென்னிந்திய அளவில் பிரபலமான இசையமைப்பாளராகவே இருக்கிறார். அண்மை காலமாக, தமிழ் சினிமா மட்டுமல்லாது தெலுங்கிலும் நிறைய திரைப்படங்களுக்கு இசையமைப்பதுடன் அடுத்தடுத்து புதிய படங்களிலும் ஒப்பந்தமாகி வருகிறார்.
தற்போது, இந்த மாதத்திலேயே ஜிவி இசையமைப்பில் வெளியான நடிகர் சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் மற்றும் நடிகர் ரவி தேஜாவின் இருமுடி கட்டு ஆகிய திரைப்படங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெற்றியைப் பெற்றுள்ளன. (இரண்டுமே தெலுங்கு இயக்குநர்கள் இயக்கியவை.)
Advertisement
Advertisement
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் உணர்வுப்பூர்வமாக அமைந்ததால் கதைக்கு பலத்தைக் கொடுத்தன. அதே போல், இருமுடி கட்டு திரைப்படத்திலுள்ள வில்லாளி வீரனே பாடல் திரையரங்குகளில் ரசிகர்களை நடனமாட வைக்கும் அளவிற்கு சிறப்பாக உள்ளது.
தமிழ் இசையமைப்பாளரான ஜிவி பிரகாஷ் அடுத்தடுத்து 2 தெலுங்கு இயக்குநர்கள் இயக்கிய படங்களுக்கான வெற்றியில் பெரிய பங்களிப்பைச் செய்துள்ளதால் ரசிகர்கள் ஜிவியைப் பாராட்டி வருகின்றனர்.
Films scored by music composer GV Prakash have achieved success in Telugu.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.