FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பார்த்த ஞாபகம் இல்லையோ? சௌகார் ஜானகியின் புதிய பறவை பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!

நடிகை சௌகார் ஜானகி புதிய பறவை படத்தில் நடித்தது பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!

சௌகார் ஜானகி
பகிர்:

பார்த்த ஞாபகம் இல்லையோ என்ற பாடலைப் பார்க்கும் எவர் ஒருவருக்கும், சௌகார் ஜானகியின் நளிமான ஆடை, ஆட்டம் என அனைத்தும் பிடித்துப்போகும்.

அதற்கு முன்புவரை, அடுத்தாத்து அம்புஜத்தைப் பார்த்தேளா எனக் கேட்கும் மாமி கதாபாத்திரத்துக்குத்தான் பொருத்தமாக இருப்பார் என்று நினைத்திருந்த சௌகார் ஜானகியை, புதிய பறவை படத்தில் ஒரு நவீன இளைஞியாக, தைரியமான பெண்ணாக பார்த்த யார் ஒருவருக்கும் ஒரு சந்தேகம் எழுந்திருக்கும். நம்ம சௌகார் ஜானகியா இவர். ஒருவேளை அவருக்கு தங்கை யாராவது இருந்திருப்பார்களா? என்பதே.

ஆனால் அது சௌகார் ஜானகிதான். 1964ஆம் ஆண்டு புதிய பறவை படத்தை இயக்கிய தாதா மிராசியிடம், சித்ரா கதாபாத்திரத்துக்கு சௌகார் ஜானகி பொருத்தமாக இருப்பார் என்று சிபாரிசு செய்ததே சிவாஜிதானாம். ஆனால், நடிகை ஜானகி இதுவரை ஏற்றிருந்த படங்களைப் பார்த்த மிராசுக்கு, இதில் ஒற்ற கருத்தில்லையாம். எவ்வளவோ பேசியிருக்கிறார் சிவாஜியிடம்.

Advertisement

Advertisement

கட்டுக்கோப்பான கதாபாத்திரத்துக்குத்தான் பொருந்துவார், இதில் நவீன ஆடைகள் அணிந்து நடனமெல்லாம் ஆட வேண்டும் என்பதால் சற்று தயங்கினாராம். ஆனால், சிவாஜி விடவில்லையாம். தன் கருத்தில் பின்வாங்க முன்வராததால் சௌகார் ஜானகி இந்தப் படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஆனால், சிவாஜி வைத்த நம்பிக்கை வீண்போகவில்லை. பார்த்த ஜாபகம் இல்லையோ பாட்டில் அவ்வளவு அருமையான முகபாவனை, ஆடை அலங்காரம், நடனம் என சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சௌகார் ஜானகி, மிராசுவின் எண்ணத்தை உடைத்தெறிந்துள்ளார்.

படம் சூப்பர் டூப்பர் ஹிட். அப்போதுதான் ஒரு நடிகைக்குள் எத்தனை திறமை ஒளிந்திருக்கிறது என்பதை அன்றே சிவாஜி கண்டுபிடித்துள்ளார் என்று இயக்குநர் மிராசி பல முறை மேடைகளில் சொல்லி புகழ்ந்திருக்கிறாராம்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என சுமார் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற சௌகார் ஜானகி, தன்னுடைய 94வது வயதில் உடல்நலக் குறைவால் சென்னையில் நேற்று காலமானார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments