FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சினிமாவை மிகத் தீவிரமாக எடுத்துக்கொள்ளாதீர்கள்: நடிகர் யஷ்

சினிமா குறித்து நடிகர் யஷ் பேச்சு...

நடிகர் யஷ்
பகிர்:

நடிகர் யஷ் சினிமாவை தீவிரமாக எடுத்துக்கொள்ளக் கூடாது எனக் கூறியுள்ளார்.

நடிகர் யாஷ் தனது 'டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்' ( Toxic: A Fairy Tale for Grownups ) படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை கீதா மோகன்தாஸ் இயக்க, ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார். ஆக. 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதன் முன் வெளியீட்டு நிகழ்வு ஹைதராபாத்தில் நேற்று (ஆக.22) மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. நிகழ்வில் படக்குழுவினர் உள்பட பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

அங்கு பேசிய நடிகர் யஷ், “மிக விரைவாக இந்திய சினிமாவை உலக அரங்குகளுக்கு கொண்டு சென்று நிலை நிறுத்துவோம். இங்கு இளைஞர்களும் மாணவர்களும் இருக்கிறீர்கள். நீங்கள் சினிமாவை ஒருபோதும் மிகத் தீவிரமாக எடுத்துக்கொள்ளாதீர்கள். நாங்களெல்லாம் எதையும் பெரிதாக சாதித்துவிடவில்லை. ஆனால், நீங்கள் வாழ்வில் என்ன செய்ய விரும்புகிறீர்களோ, அதைக் கனவாகக் கொண்டு கடினமாக உழையுங்கள். வெற்றியும் மரியாதையும் நிச்சயமாக உங்களைத் தேடி வரும். எதிலாவது தோல்வியடைந்தால், அதற்காக உலகத்தைக் குறை சொல்லாதீர்கள்; அந்தத் தோல்விக்கு நாம் மட்டுமே பொறுப்பு” எனத் தெரிவித்துள்ளார்.

Actor Yash has stated that one should not take cinema too seriously.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments