FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மூக்குத்தி அம்மன் -2 படத்திற்கு பிரமாண்டத்தை சேர்க்கும் நயன்தாரா!

நடிகை நயன்தாரா நடிப்பில் மூக்குத்தி அம்மன் -2 திரைப்படம் உருவாகி வருவது குறித்து...

50 வினாடிகள் முன்பு
மூக்குத்தி அம்மன் -2 - எக்ஸ்
பகிர்:

நடிகை நயன்தாரா நடிப்பில் மூக்குத்தி அம்மன் -2 திரைப்படம் உருவாகி வருகிறது.

அரண்மனை படத்தின் அடுத்தடுத்த பாகங்களை இயக்கி வெற்றி பெற்ற சுந்தர். சி இப்படத்தை இயக்குவதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் பிரமாண்ட காட்சிகள், ஃபேன்டஸி கதையம்சம், நகைச்சுவை, உணர்வுப்பூர்வமான காட்சிகள் உடன் உருவாக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

நயன்தாரா மட்டுமின்றி, துனியா விஜய், ரெஜினா கஸண்ட்ரா, யோகி பாபு, ஊர்வசி, அபிநயா, ராமச்சந்திர ராஜு, அஜய் கோஷ், சிங்கம்புலி, மைனா நந்தினி ஆகியோர் நடித்து வருகின்றனர்.

வழக்கமாக பெரிய நடிகர் பட்டாளத்தை வைத்து இயக்கும் சுந்தர். சி, இம்முறையும் பெரிய நடிகர் பட்டாளத்தை நடிக்க வைத்துள்ளார். இதில் நயன்தாராவுக்கு நடிகை ரெஜினா வில்லியாக நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஹிப்ஹாப் ஆதி இசையமைக்கவுள்ள இப்படத்தை, வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல், ஐவி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், அவ்னி சினிமேக்ஸ் மற்றும் ரெளடி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கின்றன.

summary

Nayanthara in Mookuthi Amman 2 Is Regina turning into a villain

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments