தர்மன் திரைப்படத்தில் சிறப்பு நடனமாடும் ஷ்ரேயா?
நடிகை ஷ்ரேயா தர்மன் திரைப்படத்தில் இணைந்துள்ளதாகத் தகவல்...
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் தர்மன் திரைப்படத்திற்காக ஷ்ரேயா சிறப்பு நடனமாடி வருவதாகத் தெரிகிறது.
இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 173 திரைப்படத்திற்குத் தர்மன் எனப் பெயரிட்டுள்ளனர். ஆக்ஷன் கலந்த கதையாக உருவாகிவரும் இப்படத்தில் ரஜினி மருத்துவராக நடிக்கிறார். இது, படையப்பா மற்றும் வேட்டையாடு விளையாடு கலவையாக இருக்கும் என இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து தெரிவித்திருந்தார்.
அண்மையில், இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியதாக அறிவிக்கப்பட்டது. மேலும், இப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொதினேனி ரஜினிக்கு வில்லனாக நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Advertisement
Advertisement
இந்த நிலையில், நடிகை ஷ்ரேயா நடிகர் ரஜினிகாந்த்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, ‘மகிழ்ச்சியான நாள்’ எனக் குறிப்பிட்டுள்ளார். இதனால், இப்படத்தின் சிறப்பு நடனத்தில் ரஜினியுடன் நடிகை ஷ்ரேயா நடிப்பதாகத் தெரிகிறது. சிவாஜி திரைப்படத்தில் இடம்பெற்ற, வாஜி வாஜி பாடலில் ரஜினி - ஷ்ரேயாவின் நடனம் பெரிதாகக் கவனிக்கப்பட்டது. தற்போது, மீண்டும் இக்கூட்டணி இணைந்திருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் கமல் ஹாசன் தயாரிக்கும் இப்படத்தில் நடிகர்கள் சிம்ரன், ராஷி கன்னா ஆகியோரும் இணைந்துள்ளனர். அனிருத் இசையமைக்க அன்பறிவ் சகோதரர்கள் சண்டைப் பயிற்சியாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.
It appears that Shriya is performing a special dance number for the film Dharman, starring Rajinikanth.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.