மலிவான போலி, பி கிரேட் பட நடிகை... கங்கனா ரணாவத் - டாப்ஸி 7 ஆண்டு மோதல்!
எம்பியும் நடிகையுமான கங்கனா ரணாவத் - நடிகை டாப்ஸி இடையே ஏழு ஆண்டுகளாக நடைபெறும் மோதல் குறித்து...
நடிகை டாப்ஸி பண்ணு தனக்கும் எம்பியும் நடிகையுமான கங்கனா ரணாவத் இடையேயான மோதல் குறித்த கேள்விகளை ஊடகங்கள் தவிர்க்க வேண்டுமென கூறியுள்ளார்.
டாப்ஸி பன்னு (39 வயது) தென்னிந்திய படங்களில் நடித்து பிரபலமானவர். தற்போது ஹிந்தி சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார். தமிழில் ஆடுகளம், ஆரம்பம், காஞ்சனா 2, கேம் ஓவர் உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர்.
கனிகா திலோன் எழுதியுள்ள காந்தாரி படத்தினை தேவாஷிஷ் மகிஜா இயக்கியுள்ளார். இந்தப் படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடியில் செப்டம்பர் 3ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
காந்தாரி படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கங்கனா குறித்து கேள்வி கேட்கப்பட்டதற்கு டாப்ஸி, “இந்தப் பிரச்னையை ஏன் முடிக்காமல் இருக்கிறீர்கள்? எங்கள் இருவரிடமும் இது குறித்து நீங்கள் கேள்வி கேட்காமல் இருந்தாலே அந்தப் பிரச்னை தானாகவே முடிவுக்கு வந்துவிடும்” என்றார்.
கங்கானா ரணாவத் - டாப்ஸிக்கு என்ன பிரச்னை?
கடந்த ஏழு ஆண்டுகளாக இருவருக்கும் இடையேயான இந்தப் பிரச்னை இருக்கிறது. 2019ல் தொடங்கியது. அப்போது கங்கனா நடித்த ஜட்ஸ்மெண்டால் ஹாய் கியா எனும் படத்தின் டிரைலர் வெளியானது. அதில் கங்கனாவின் பெயரைக் குறிப்பிடாமல் டாப்ஸி பாராட்டினார். இதற்கு கங்கனாவின் சகோதரியும் அவரது மேலாளருமான ரங்கோலி சந்தேல் டாப்ஸியை ’சஸ்டி காபி - Sasti Copy’ (மலிவான போலி) என விமர்சித்தார்.
இந்த கிண்டலுக்கு டாப்ஸி, “சுரூட்டை முடி வைத்திருப்பதற்கு கங்கனா ஒன்றும் காப்புரிமை வைத்திருக்கவில்லை” எனக் கூறினார். அந்த நேரத்தில் கங்கனாவின் சம்பளம் அதிகமாக இருந்தது. அதேபோல் தோற்றத்தில் இருந்த டாப்ஸிக்கு குறைவான சம்பளம் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
பின்னர், 2020ல் பாலிவுட்டில் வெளியூர் காரர்கள் ஆதிக்கம் மற்றும் நெப்போடிஸம் தொடர்பாக விவாதங்கள் எழுந்தன. அப்போது கங்கனா ரணாவத் தனது இன்ஸ்டா பக்கத்தில் டாப்ஸியை பி கிரேட் படங்களில் நடிப்பவர் என்றும் வெளியுலக ஆட்கள் தங்களது தனிப்பட்ட வாய்ப்புகளுக்காக சினிமா மாஃபியாவை உருவாக்குகிறார்கள் என கடுமையாக விமர்சித்தார்.
இந்த விமர்சனத்துக்கு டாப்ஸி ஒருவரை ஒருவர் ஆதரிக்க வேண்டும் எனக் கூறினார். பின்னர், 2021l அவுட்ஸைடர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவத்தையும் தொடங்கினார்.
இந்த மலிவான போலி பிரச்னை ஏழு ஆண்டுகளாக தொடர்ந்து வருகின்றன. சமீபத்திய நேர்காணலில் டாப்ஸி, “நான் அவரை சந்ததித்தே இல்லை. முன்பும் சரி இப்போது சரி. எனது பெற்றோர்கள் என்னை சரியாக வளர்த்திருக்கிறார்கள். அப்படித்தான் எனது கருத்துகள் பார்வைகளும் இருக்கும். அவரது வளர்ப்பின்படி அவர் பேசுகிறார். யார் எங்கிருந்து வந்திருக்கிறார்கள் என்பதை மக்கள் அறிந்துகொள்வார்கள்” எனவும் கூறினார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கங்கனா தனது இன்ஸ்டாவில், “மற்றுமொரு பி கிரேட் படத்துடன் ஒரு மலிவான போலி வரவிருக்கிறார். ஊடகங்களின் தலைப்புச் செய்திகளில் கங்கனா மட்டுமே இருக்கிறார். ஆனால், இன்று அவர் தனது எல்லையை மீறிவிட்டார். நான் யாருடைய பெற்றோரையும் எப்போதும் இழுக்கவில்லை. எனது பெற்றோர்கள் அவர்களால் முடிந்த அளவுக்குச் சிறப்பாகவே வளர்த்திருக்கிறார்கள்.
உனது பெற்றோர்கள் ஏன் என்னைப் போல ஒரு அசலான பெண்ணை பெற்றெடுக்கவில்லை. பாவம், மலிவான போலி நீ! உனது முயற்சிகளுக்கு வருந்துகிறேன் என்றார்.
இதனையொட்டி காந்தாரி பட விழாவில் ஊடகங்கள் இந்தக் கேள்விகளை தவிர்த்தாலே பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் என டாப்ஸி பேசியுள்ளார்.
Taapsee asks media to stop questions on feud with Kangana: 'Why don't you let this matter end'
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.