FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஆஷா போஸ்லே பாடிய கடைசி பாடலின் ரிலீஸ் தேதி!

மறைந்த பிரபல பாடகி ஆஷா போஸ்லே பாடிய கடைசி பாடல் மற்றும் அதன் வெளியீட்டுத் தேதி குறித்து...

பின்னணி பாடகி ஆஷா போஸ்லே - DPS
பகிர்:

மறைந்த பிரபல பாடகி ஆஷா போஸ்லே பாடிய கடைசி பாடல் அவரது பிறந்த நாளான்று வெளியாகுமென படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

புகழ்பெற்ற திரைப்பட பின்னணி பாடகி ஆஷா போஸ்லே (92) மாரடைப்பு காரணமாக மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த ஏப்.12ல் காலமானார்.

பாடகி ஆஷா போஸ்லே 20-க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் 12,000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி கோடிக்கணக்கான ரசிகர்களைக் கவர்ந்தார். மேலும், பத்ம விபூஷன், தாதாசாகேப் பால்கே விருது, மற்றும் மகாராஷ்டிர பூஷன் விருது போன்ற உயரிய விருதுகளை வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், அவர் குரலில் கடைசியாக ஒரு பாடல் பாடப்பட்டுள்ளது. ஹரிஷ் வியாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஓம் கா ஹரி’ என்ற ஹிந்தி திரைப்படத்தில் ’ஆ மேரி ஜிந்தகி, டு சுபி ஹாய் கஹாந் - Ae Meri Zindagi, Tu Chupi Hai Kahan’ (என் உயிரே, நீ எங்கே ஒளிந்திருக்கிறாய்?) என்ற பாடலைப் பாடியுள்ளார்.

இந்தப் பாடல் செப்டம்பர் 8ஆம் தேதி அவரது பிறந்த நாளில் வெளியாகவிருக்கிறது. இந்தப் பாடல் 2023ல் ஆஷா போஸ்லே குரலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்போது அவருக்கு 90 வயதுக்கும் மேல் இருந்தது.

நகைச்சுவை திரைப்படமாக உருவாகியுள்ள ‘ஓம் கா ஹரி’ படத்தில் தந்தை - மகன் உறவு குறித்து எடுக்கப்பட்டுள்ளது.

summary

Asha Bhosle's last recorded song to be released on this special day

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments