FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

டிக்கெட் முன்பதிவில் சாதனை: இருமுடி கட்டு படத்தின் முதல் வார வசூல்!

நடிகர் ரவி தேஜா நடிப்பில் வெளியான இருமுடி கட்டு படத்தின் முதல் வார வசூல் சாதனை குறித்து...

இருமுடி கட்டு படத்தின் போஸ்டர். - படம்: எக்ஸ் / மைத்ரி மூவி மேக்கர்ஸ்
பகிர்:

நடிகர் ரவி தேஜா நடிப்பில் வெளிப்பில் இருமுடி கட்டு படத்தின் முதல் வார வசூல் சாதனை பட்டியலில் இணைந்துள்ளது. இதுவரை, ரூ.135 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

ஷிவ நிர்வாணா இயக்கத்தில் ரவி தேஜா, பிரியா பவானி ஷங்கர், பேபி நக்‌ஷத்திரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இருமுடி (தமிழில் இருமுடி கட்டு) திரைப்படம் கடந்த ஆக.21ஆம் தேதி வெளியானது.

இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். வில்லாதி வில்லனே என்ற சாமி பாடல் திரையரங்குகளில் மிகுந்த கவனம் பெற்றது.

Advertisement

Advertisement

வழக்கமான மாஸ் மசாலா கலந்த ரவி தேஜா படமாக அல்லாமல் சிறு கிராமத்து குழந்தைகளின் பாலியல் சீண்டல்கள் குறித்து உணர்சிகரமாக உருவாக்கப்பட்டிருந்தது.

இந்தப் படம் முதல்வார இறுதியில் ரூ.135 கோடி வசூலித்துள்ளது. இதுவரை 55 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு மட்டுமே செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளன.

திருவிழா அல்லாத சமயத்தில் வெளியாகி திங்கள், செவ்வாய், புதன் கிழமைகளில் அதிகமாக புக்மைஷோவில் முன்பதிவு செய்யப்பட்ட உள்ளூர் படமாக இருமுடி சாதனை படைத்துள்ளதென படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது.

summary

5.5 million tickets sold: 'Irumudi Kattu' movie's astonishing first-week box office collection!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments