FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஹிப்ஹாப் ஆதியின் மீசைய முறுக்கு 2! 5 ஆவது பாடல் வெளியானது!

ஹிப்ஹாப் ஆதியின் “மீசைய முறுக்கு 2” படத்தின் 5 ஆவது பாடல் வெளியாகியுள்ளது குறித்து...

49 வினாடிகள் முன்பு
மீசைய முறுக்கு 2 படத்தின் 5 ஆவது பாடல்..
பகிர்:

ஹிப்ஹாப் தமிழா ஆதி இயக்கி நாயகனாக நடித்துள்ள “மீசைய முறுக்கு 2” திரைப்படத்தின் 5 ஆவது பாடல் வெளியாகியுள்ளது.

ஹிப்ஹாப் தமிழா ஆதி இயக்கி, இசையமைத்து நாயகனாக நடித்து கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியாகி வணிக மற்றும் விமர்சன ரீதியாக வெற்றி பெற்ற படம் “மீசையமுறுக்கு”.

இதனைத் தொடர்ந்து, ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே உருவாகி வரும் “மீசைய முறுக்கு 2” படத்தில் நடிகர்கள் கேத்திகா ஷர்மா, யூடியூபர் ஹர்ஷத் கான், சைத்ரா ஆச்சார், நாசர் ஆகியோர் நடித்துள்ளனர்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ள இந்தப் படத்தின் “கலைவாணியே” எனும் 5 ஆவது பாடல் இன்று (ஆக. 28) மாலை படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, மீசைய முறுக்கு 2 படத்தின் ஆரா 10/10, கோயிந்தம்மா உள்ளிட்ட பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன. மேலும், இந்தப் படம் வரும் செப். 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

The fifth song from the movie "Meesaya Murukku 2," directed by and starring Hiphop Adhi, has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments