டிசி படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி!
டிசி படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பாக...
நடிகர் லோகேஷ் கனகராஜின் டிசி திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநரான லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடித்து, இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வெளியான படம் டிசி.
ஆக்ஷன் கதைக்களத்தில் உருவான டிசி திரைப்படம், கடந்த ஆக. 7-ல் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
Advertisement
Advertisement
அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தில், வாமிகா கபி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
தேவதாஸ் என்ற புதினத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. தேவதாஸ் மற்றும் சந்திரா என்ற பெயர்களின் சுருக்கமே 'டிசி'.
இந்தப் படம் வெளியாகிய 15 நாள்களிலேயே உலகளவில் ரூ. 100 கோடி வசூல் செய்தது.
இந்த நிலையில், டிசி திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வரும் செப். 4 ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
The OTT release date for director Lokesh Kanagaraj's film has been announced.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.