சிறை படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி!
நடிகர் விக்ரம் பிரபுவின் சிறை படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து...
நடிகர் விக்ரம் பிரபுவின் சிறை படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டின் இறுதி வெளியீடாக வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம் பிரபு, எல்.கே. அக்ஷய் குமார் நடிப்பில் திரைக்கு வந்த சிறை திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்தது.
Advertisement
Advertisement
காதல் கதைக்குப் பின் காவல்துறை அதிகார பின்னணியை மையமாக வைத்து உருவான இந்தப் படத்துக்கு கூடுதல் திரைகள் ஒதுக்கப்பட்டு வணிக ரீதியான வெற்றியும் பெற்றது குறிப்பிடத்தக்கது.
திரையரங்கில் பார்க்கத் தவறியவர்கள் ஓடிடி வெளியீட்டிற்காக காத்திருந்தார்கள்.
இந்நிலையில், இந்தப் படம் வரும் ஜன.23ஆம் தேதி ஜீ5 தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது.
The OTT release date of actor Vikram Prabhu's film 'Sirai' has been announced.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.