முகப்பு
செய்திகள்

பிரேமலு நடிகர் சங்கீத் பிரதாப் நாயகனாக நடிக்கும் புதிய படம்!

மலையாள நடிகர் சங்கீத் பிரதாப் நாயகனாக நடிக்கும் புதிய படம் குறித்து...

Updated On : 1 ஜூலை 2026, 7:34 pm IST
நடிகர் சங்கீத் பிரதாப் நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் பூஜை... - Instagram
பகிர்:

நடிகர் சங்கீத் பிரதாப் நாயகனாக நடிக்கும் புதிய மலையாள திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இயக்குநர் கிரீஷ் ஏடி இயக்கத்தில் நடிகர்கள் நஸ்லன், மமிதா பைஜூ மற்றும் படத்தொகுப்பாளர் சங்கீத் பிரதாப் ஆகியோர் நடித்து கடந்த 2024 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பிரேமலு.

ரூ.130 கோடிக்கும் மேல் வசூல் செய்து வெற்றி பெற்ற இந்தப் படத்தில் அமல் டேவிஸ் எனும் கதாபாத்திரத்தில் நடித்த சங்கீத் பிரதாப் மலையாளம் மற்றும் தமிழ் ரசிகர்களிடையே பெருமளவில் கவனம் பெற்றார்.

Advertisement

Advertisement

இதனைத் தொடர்ந்து, மோகன் லாலின் “ஹிருதயபூரம்”, நிவின் பாலியின் “பேபி கெர்ள்” மற்றும் நஸ்லனின் “மோலிவுட் டைம்ஸ்” ஆகிய படங்களிலும் சங்கீத் பிரதாப் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில், பனோரமா ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்தில் நடிகர் சங்கீத் பிரதாப் நாயகனாக நடிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் விவேக் இயக்கத்தில் நடிகை அன்னா பென் நாயகியாக நடிக்கும் இந்தப் படத்தின் பூஜை இன்று (ஜூலை 1) நடைபெற்றுள்ளது.

ஏற்கெனவே, நடிகர் சங்கீத் பிரதாப் நாயகனாக அறிமுகமாகும் “மெடிக்கல் மிராக்கள்” எனும் புதிய படம் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

summary

Actor Sangeeth Prathap is starring as the lead in a new Malayalam film.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments