போக்சோ வழக்கில் நடிகர் ஸ்ரீஜித் ரவிக்கு ஓராண்டு சிறை!
சிறுமிகளிடம் அத்துமீறிய வழக்கில் ஸ்ரீஜித்துக்கு தண்டனை...

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீஜித் ரவிக்கு ஓராண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
மலையாள நடிகரான ஸ்ரீஜித் ரவி கடந்த 20 ஆண்டுகளுக்கும் அதிகமாக சினிமாவில் நடிகராக உள்ளார். இறுதியாக, இவர் நடிப்பில் மாலிக்கபுரம், நடிகர், மார்கோ, சுமதி வளவு உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகி கவனம் பெற்றிருந்தன.
தமிழில் கும்கி திரைப்படத்தில் வனத்துறை காவலராக அறிமுகமானவர் மதயானைக்கூட்டம், கதகளி, அசுரவதம் என சில திரைப்படங்களில் நடித்துள்ளார். இறுதியாக, கோபி நயினாரின் கருப்பர் நகரம் திரைப்படத்திலும் நடித்ததாகத் தெரிகிறது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், ஸ்ரீஜித் ரவி கடந்த 2022 ஆம் ஆண்டு திருச்சூர் பகுதியில் காருக்குள் அமர்ந்தபடி சாலையில் கடந்து சென்ற இரண்டு சிறுமிகளிடம் தன் அந்தரங்க உறுப்பைக் காட்டியதாக வழக்குப் பதிவானது. இந்த வழக்கை போக்சோ பிரிவில் பதிவு செய்து நீதிமன்றம் விசாரித்து வந்தது.
தற்போது, விசாரணை முடிவில் ஸ்ரீஜித் ரவி குற்றத்தைச் செய்தது உறுதியாகியுள்ளது. 3 ஆண்டுகளாக 21 பேரிடம் குறுக்கு விசாரணை செய்து இறுதியில் சிறுமிகளிடம் தவறாக நடந்துகொண்ட ஸ்ரீஜித் ரவி ரூ. 50 ஆயிரத்தை அபராதமாகச் செலுத்தவும் ஓராண்டு சிறை தண்டனையை அனுபவிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஸ்ரீஜித் ரவி கடந்த 2016 ஆம் ஆண்டு பாலக்காட்டில் இதே போல் காருக்குள் அமர்ந்து பள்ளி மாணவிகளிடம் சீண்டலில் ஈடுபட்டதற்காகக் கைதாகி விடுதலையானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Popular Malayalam actor Sreejith Ravi has been sentenced to one year in prison.