முகப்பு
செய்திகள்

40 வினாடிகள், 5 வார்த்தைகள்! ஸ்பைடர்மேன் படத்தில் மெஸ்ஸிக்கு ரூ. 143 கோடி சம்பளமா?

ஸ்பைடர்மேன் படத்தின் ப்ரோமோ விடியோவில் நடித்த கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியின் சம்பளம் குறித்து...

Updated On : 3 ஜூலை 2026, 3:09 pm IST
ஸ்பைடர்மேன் படத்தில் மெஸ்ஸியின் சம்பளம் குறித்து... - யூடியூப்
பகிர்:

ஸ்பைடர்மேன் படத்தின் ப்ரோமோ விடியோவில் நடித்த கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியின் சம்பளம் குறித்து சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது.

மார்வெல் நிறுவனத்தின் தயாரிப்பில் டாம் டாம் ஹாலண்ட், ஸென்டயா, ஜேக்கப் பேட்டலான், மார்க் ருஃபாலோ உள்ளிட்டோர் நடித்துள்ள ஸ்பைடர்மேன் - ப்ரான்ட் நியூ டே திரைப்படம், உலகம் முழுவதும் ஜூலை 31 ஆம் தேதியில் வெளியாகிறது. மேலும், இந்தியாவில் சிறப்புக் காட்சியாக ஜூலை 30 ஆம் தேதியிலேயே வெளியிடப்படுகிறது.

இந்த நிலையில், படத்தின் ப்ரோமோ விடியோ ஒன்றையும் சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் வெளியிட்டுள்ளது. அதுமட்டுமின்றி, 39 வினாடிகள் கொண்ட இந்த ப்ரோமோ விடியோவில் கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியும் நடித்திருப்பதும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Advertisement

Advertisement

இதனிடையே, 39 வினாடிகள் கொண்ட விடியோவில் வெறும் 5 வார்த்தைகள் மட்டுமே பேசியுள்ள மெஸ்ஸிக்கு சம்பளமாக 15 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ. 143 கோடி) வழங்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் பேசப்பட்டு வருகிறது.

இருப்பினும், மெஸ்ஸிக்கு ரூ. 143 கோடி சம்பளம் வழங்கப்பட்டதாக படத் தயாரிப்பு நிறுவனமோ மெஸ்ஸியின் தரப்பிலோ உறுதிப்படுத்தப்பட்ட எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை.

summary

Did Lionel Messi earn $15m by appearing in Spider-Man: Brand New Day teaser?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments