ஜூன் மாதம் ஒரு தேவதைக் கதை போல இருந்தது: சமந்தாவின் அழகிய பதிவு
ஜூன் மாதம் ஒரு தேவதைக் கதை போல இருந்ததாக சமந்தா பதிவு செய்திருக்கிறார்..
நடிகை சமந்தா - இயக்குநர் ராஜ் நிடிமோரு தம்பதி, விரைவில் தங்களது முதல் குழந்தையை எதிர்பார்த்திருக்கிறார்கள். இவர்கள் இருவரும் இணைந்து உருவாக்கிய மா இன்டி பங்காரம் திரைப்படம் வெற்றி பெற்று வரும் நிலையில், கடந்த ஜூன் மாதத்தைப் பற்றி சமந்தா ஒரு பதிவை போட்டுள்ளார்.
நடிகை சமந்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஜூன் மாதத்தில் எடுத்தப் புகைப்படங்கள் விடியோக்களைப் பகிர்ந்து, இந்த ஜூன் மாதம் ஒரு தேவதைக் கதை போல இருந்தது என்று பதிவிட்டிருக்கிறார்.
இதனைப் பார்க்கும் அவரது ரசிகர்கள், விவகாரத்திலிருந்து வெளியேறி, புதிய வாழ்க்கை, குழந்தை, வெற்றிப் படம் என சமந்தா மகிழ்ச்சியாக இருப்பதற்கு தங்களது சந்தோஷத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
Advertisement
Advertisement
அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற சமந்தாவின் வயிறு சற்று பெரிதாக இருந்ததைப் பார்த்த அவரது ரசிகர்கள், சமந்தா கருவுற்றிருக்கிறாரா என்று கேட்டு வந்தனர். அடுத்த ஒரு சில நாள்களில், அவர் பங்கேற்ற நிகழ்ச்சியில், தான் மகப்பேறு விடுப்பு எடுக்கப்போவது குறித்து அறிவித்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.
இப்போது, வெளிர் நிற சுடிதார், இளஞ்சிவப்பு புடவையில் எடுத்த புகைப்படங்கள், கருவுற்றிருக்கும் நேரத்திலும் அவர் விடாமல் செய்யும் உடற்பயிற்சிகளின் விடியோக்கள், கணவருடன் எடுத்துக் கொண்ட செல்ஃபி, விடியோக்களையும் பகிர்ந்து, இந்த ஜூன் மாதம் தேவதைக் கதை போல இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பதிவைப் பார்க்கும் பல பெண் ரசிகர்களும், சமந்தா கருவுற்றிருக்கும்போதும் தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்வதைப் பார்த்து ஆச்சரியம் அடைந்
Samantha has posted that the month of June felt like a fairy tale.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.