பரிமளா அண்ட் கோ படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி!
பரிமளா அண்ட் கோ படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பாக...
பரிமளா அண்ட் கோ படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் நடிகர்கள் ஜெயராம், ஊர்வசி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, மிஷ்கின், சாண்டி, யோகி பாபு, சிங்கம்புலி உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
முன்னதாக மே 28 அன்று இந்தப் படத்தை வெளியிட படக்குழு முடிவெடுத்திருந்த நிலையில், கருப்பு திரைப்படத்தின் வெற்றி காரணமாக பரிமளா அண்ட் கோ படம் ஜூன் 5 அன்று வெளியானது.
Advertisement
Advertisement
இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களைப் பெற்றது. இந்தப் படத்துக்கு ஃபாக்ஸன் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில், பரிமளா அண்ட் கோ திரைப்படம் வரும் ஜூலை 10 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
The OTT release date for the movie Parimala and Co has been officially announced.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.