8 மாதங்களில் 17 கிலோ எடையைக் குறைத்த கிரேஸ் ஆண்டனி! எப்படி?
நடிகை கிரேஸ் ஆண்டனி உடல் எடையைக் குறைத்துள்ளார்...
நடிகை கிரேஸ் ஆண்டனி கணிசமான எடையைக் குறைத்து ஆளே மாறியுள்ளார்.
மலையாள நடிகையான கிரேஸ் ஆண்டனி ஹேப்பி வெட்டிங் எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி கும்பலாங்கி நைட்ஸ் உள்பட பல திரைப்படங்களில் குணச்சித்திர நடிகையாக நடித்து அசத்தினார். நகைச்சுவை கதாபாத்திரங்களில் பெரிய நடிகையாக வலம் வருவார் என்கிற அளவிற்கு ஒவ்வொரு படமும் நன்றாகக் கைகொடுத்தன.
தமிழில் இயக்குநர் ராம் இயக்கிய பறந்து போ படத்திலும் நடிகர் சிவாவின் மனைவியாக நடித்து பாராட்டுகளைப் பெற்றார். கடந்தாண்டு, இவருக்கும் இசையமைப்பாளர் அபி டாம் சிரியாக் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.
Advertisement
Advertisement
இதற்கிடையே, உடல் எடையைக் குறைக்கும் முயற்சிகளிலும் கிரேஸ் ஆண்டனி தொடர்ந்து கவனம் செலுத்தி வந்தார். இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
கடந்த 8 மாதங்களில் 80 கிலோவிலிருந்து 63 கிலோவாக 17 கிலோ எடையைக் குறைத்துள்ளாராம். ஆரோக்கியமான உணவுமுறை மற்றும் உடல் பயிற்சிகளை விடாமல் செய்து வந்ததால் இது சாத்தியம் என்பதையும் தெரிவித்துள்ளார்.
பேரிளம் தோற்றத்தில் இருந்த கிரேஸ் எடை குறைவால், மிக இளமையாகவும் அழகாகவும் மாறி ரசிகர்களிடம் பாராட்டுகளைப் பெற்று வருகிறார்!
Actress Grace Antony has lost a significant amount of weight and undergone a complete transformation.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.