சிஜி பணிகளால் தாமதமாகும் கமல் - 237 படப்பிடிப்பு?
நடிகர் கமல் ஹாசனின் 237-வது படத்தின் படப்பிடிப்பு குறித்து...
நடிகர் கமல் ஹாசனின் 237-வது திரைப்படத்தின் படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் கமல்ஹாசனின் 237-வது திரைப்படத்தை சண்டைப் பயிற்சியாளர்களான அன்பு, அறிவ் சகோதரர்கள் இயக்குகிறார்கள். இப்படம் ஏஐ தொழில்நுட்ப பின்னணியில் அறிவியல் புனைகதையாக உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான முதல்கட்ட பணிகளுக்கான படக்குழுவை அழைத்துக்கொண்டு கமல் அமெரிக்கா சென்றார். மேலும், அவர் அங்கே ஏஐ தொடர்பான படிப்பையும் படித்தார்.
இப்படத்தின் ஒளிப்பதிவாளராக சுனில் கே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஆடுஜீவிதம் உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். இசையமைப்பாளர் - ஜேக்ஸ் பிஜாய். தற்போது, தென்னிந்திய சினிமாவில் அதிகம் பேசப்படும் இசையமைப்பாளராக பிஜாய் உருவாகியுள்ளார். எடிட்டர் - ஷமீர் கேஎம், கலை இயக்குநராக வினேஷ் பங்கலான் (லக்கி பாஸ்கர், லோகா) ஆகியோரும் இணைந்துள்ளனர்.
Advertisement
Advertisement
இதைவிட, மலையாள சினிமாவின் மிக வெற்றிகரமான திரைக்கதை எழுத்தாளரான ஷ்யாம் புஸ்கரன் இப்படத்தின் திரைக்கதையை எழுதுகிறார். இதனால், தொழில்நுட்ப ரீதியாக பலமான கூட்டணியை கமல் அமைத்திருக்கிறார்.
ஆனால், இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் துவங்காமல் இருக்கிறது. கடந்த ஆண்டே தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும் தேர்தல் மற்றும் வேறு காரணங்களால் தள்ளிச்சென்றபடியே இருந்தது.
இந்த நிலையில், இந்தத் தாமதத்திற்குக் காரணம், இப்படத்தில் ஏகப்பட்ட அனிமேஷன், ஏஐ காட்சிகள் இருப்பதால் அவற்றிற்கான சிஜி (கம்யூட்டர் கிராபிக்ஸ்) பணிகளில் தாமதம் ஏற்படுவதால்தான் படப்பிடிப்பு இன்னும் தொடங்காமல் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
There is a delay in the filming of actor Kamal Haasan's 237th movie.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.