10 ஆண்டுகளுக்குப் பிறகு... ஓடிடியில் வெளியாகும் ஜில் ஜங் ஜக்!
நடிகர் சித்தார்த் நடித்துள்ள ஜில் ஜங் ஜக் படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து...
நடிகர் சித்தார்த் நடித்துள்ள ஜில் ஜங் ஜக் படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிவிருக்கிறதென படக்குழு அறிவித்துள்ளது.
இயக்குநர் தீரஜ் வைத்தி இயக்கத்தில் கடந்த 2016ல் ஜில் ஜங் ஜக் திரைப்படம் வெளியானது. அப்போது கலவையான விமர்சனங்களைப் பெற்ற இந்தப் படம் பின்னர் ஆன்லைனில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
நடிகர் சித்தார்த் தயாரித்து நடித்துள்ள இந்தப் படத்தில் சனந்த், அவினாஷ் ரகுதேவன், நாசர், ராதா ரவி, பகவதி பெருமாள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
Advertisement
Advertisement
விஷால் சந்திரசேகர் இசையில் உருவான பாடல்கள் அனைத்தும் வித்தியாசமாக இருந்தன. குறிப்பாக ஷுட் த குருவி எனும் பாடல் மிகவும் வைரலானது.
இந்த நிலையில், இந்தப் படம் அமேசன் பிரைம் ஓடிடியில் வெளியாகியுள்ளதை இயக்குநர் அறிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “ நகராத பொருளை நிறுத்த முடியாத விசை சந்தித்தபோது. ஜில் ஜங் ஜக் (2016) தற்போது அமேசான் பிரைம் ஓடிடியில் ஸ்ட்ரீமாகிறது” எனக் கூறியுள்ளார்.
After 10 years... 'Jil Jung Juk' releases on OTT!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.