ரசிகர்கள் கவனம் ஈர்க்கும் ஹார்ட் பீட் தொடரின் முன்னோட்ட விடியோ!
ஹார்ட் பீட் தொடரின் முன்னோட்டக் காட்சி குறித்து...
ஹார்ட் பீட் தொடரின் மூன்றாம் பாகத்தின் முன்னோட்டக் காட்சி அண்மையில் வெளியான நிலையில், இந்த விடியோ இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
ஹார்ட் பீட் இணையத் தொடரின் முதல் பாகத்துக்கு கிடைத்த வரவேற்பையடுத்து, இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டது. இரண்டாம் பாகமும் மக்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து, மூன்றாம் பாகம் எடுக்கப்பட்டு வருகிறது.
தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில் டெலி ஃபேக்ட்ரி நிறுவனம் தயாரித்து வரும் ஹார்ட் பீட் இணையத் தொடரின் 3வது சீசன் ஜூலை 30 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
முந்தைய சீசன்களில் நடித்த நடிகை அனுமோள், கார்த்திக் குமார், தீபா பாலு, யோகலக்ஷ்மி, தாபா, சாருகேஷ், ராம், சபரிஷ், சர்வா உள்ளிட்டோர் மூன்றாம் பாகத்திலும் நடிக்கிறார்கள்.
ஹார்ட் பீட் இணையத் தொடரின் இரண்டாம் பாகத்தின் நிறைவுப் பகுதியில் தீபா பாலு கோமா நிலைக்கு செல்கிறார். அவருக்கு கார்த்திக் குமார்தான் தனது தந்தை என்ற விவரம் தெரியவருகிறது. இதோடு தொடர் முடிக்கப்பட்டது.
இதையடுத்து, அண்மையில் வெளியான ஹார்ட் பீட் இணையத் தொடரின் 3 ஆம் பாகத்தின் முன்னோட்ட விடியோவில், முந்தை பாகங்களில் தீபா பாலு மற்றும் கார்த்திக் குமார் ஆகியோர் பணிபுரிந்து வந்த ஆர்.கே. மருத்துவமனையிலிருந்து விலகி, இருவரும் ஏ.எம். மருத்துவமனைக்கு செல்கிறார்கள்.
அனுமோள் ஆர்.கே. மருத்துவமனையிலேயே பணிபுரிவதுபோல, காண்பிக்கப்பட்டுள்ளது. ஹார்ட் பீட் முன்னோட்டக் காட்சியை இதுவரை 34 லட்சத்துக்கும் மேற்பட்டோர் யூடியூபில் பார்த்துள்ளனர்.
Recently, the preview of the 'Heart Beat' series was released; it has gone viral online and is capturing the attention of fans.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.