FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

அருள்வான் படத்தின் வேல் செவ்வேல் பாடல் வெளியீடு!

அருள்வான் படத்தின் இரண்டாம் பாடலான ‘வேல் செவ்வேல்’ பாடல் வெளியாகியுள்ளது.

Updated On : 13 ஜூலை 2026, 8:13 pm IST
அருள்வான் படத்தில் நடிகர் ஆரவ்
பகிர்:

அருள்வான் படத்தின் இரண்டாம் பாடலான ‘வேல் செவ்வேல்’ பாடல் வெளியாகியுள்ளது.

நடிகர் அருள்நிதி ’அருள்வான்’ என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இப்படத்தை கணேஷ் விநாயகன் இயக்கியுள்ளார். நடிகர்கள் ஆரவ், ரம்யா பாண்டியன், கிருத்திகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டிரைலர் நல்ல வரவேற்பைப் பெற்றது.

Advertisement

Advertisement

மலைக்கிராமத்தில் வசிக்கும் மக்களின் வாழ்வையும், அங்குள்ள சிறுமியின் கல்வி தொடர்பான வலியையும் பேசும் படமாக இது எடுக்கப்பட்டுள்ளது.

படத்தின் முதல் பாடலான அல்லிப்பூவே பாடலைத் தொடர்ந்து இரண்டாவது பாடலான ‘வேல் செவ்வேல்’ இன்று வெளியாகியுள்ளது.

மது பாலகிருஷ்ணன், அஸ்வின் சத்யா பாடிய இப்பாடலை எஸ். ஞானகராவேல் எழுதியுள்ளார்.

அருள்வான் திரைப்படம் ஜூலை 17 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

summary

The second song from the movie Arulvan, ‘Vel Sevvel’, has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments