25 ஆண்டுகளை நிறைவு செய்த விக்ரமின் தில்! பெரிதும் அறியாத சில சுவாரஸ்யங்கள்!
தில் திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவு...
நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான தில் திரைப்படம் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
இயக்குநர் தரணி இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் கடந்த 2001, ஜூலை 13 ஆம் தேதி வெளியான திரைப்படம் தில். சேதுவுக்குப் பின் விக்ரமுக்கு சரியான வெற்றி கிடைக்காமல் இருந்த நிலையில், தில் வெற்றி விக்ரமை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்றது.
இசையமைப்பாளர் வித்யா சாகரின் அனைத்து பாடல்களும் ஹிட் அடித்த திரைப்படங்களில் இதுவும் ஒன்றும். முக்கியமாக, உன் சமயலறையில், மச்சான் மீசை, கண்ணுக்குள்ளே கெளுத்தி ஆகிய பாடல்கள் இன்றும் அதிகம் கேட்கப்படுகின்றன. கமர்சியல் படங்களுக்கு புதிய திறப்பைக் கொடுத்த தில் திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆகிவிட்டன.
Advertisement
Advertisement
இப்படம் சார்ந்து சில சுவாரஸ்யமான விஷயங்களும் இருக்கின்றன. முக்கியமாக, நடிகர் விக்ரமும் இயக்குநர் தரணியும் கல்லூரி நண்பர்கள். இருவரும் இணைந்த முதல் திரைப்படமான இதில் விக்ரமுக்கு கால் உடைந்த பின்னர் அவர் எப்படி மன உறுதியுடன் மீண்டும் வருகிறார் என்கிற காட்சி இடம்பெற்றிருக்கும்.
உண்மையிலேயே, விக்ரமும் தரணியும் இளவயதில் விபத்தின் மூலம் கால் எழும்பு உடைந்தவர்கள்தான். இருவரும் இனி நடக்க முடியாது என்கிற நிலையிலிருந்துதான் மீண்டு வந்திருப்பார்கள். அதனையே இப்படத்தில் காட்சியாக இயக்குநர் வைத்திருப்பார். தரணி முதலில் இயக்கிய திரைப்படமான எதிரும் புதிரும் வெற்றி பெறவில்லை. அந்த அடியிலிருந்தும் எழ வேண்டுமென்றே இக்காட்சி இடம்பெற்றது போல் இருக்கும்.
எதிரும் புதிரும் திரைப்படத்தில் வி. சி. ரமணி என்கிற பெயரில்தான் தரணி சினிமாவில் அறிமுகமானார். ஆனால், இரண்டாவது படமான தில்-ல் இருந்தே தரணி ஆனார். மேலும், நடிகர் விக்ரம், சியான் விக்ரம் எனப் பெயருடன் வந்ததும் இந்தப் படத்திலிருந்துதான்.
தில் திரைப்படத்திற்கு முதலில் வைத்த பெயர் கனகவேல் காக்க. பின், கனகவேல் என வைக்கப்பட்டு இறுதியில், தில் என ஆனது. வில்லனாக நடித்து மிரட்டிய ஆசிஷ் வித்யார்த்திக்கு இதுதான் முதல் தமித் திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
The film Dhill, starring actor Vikram, has completed 25 years.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.