ஓடிடியில் வெளியான சுரபியின் புதிய இணையத் தொடர்!
பவித்ரம் சீசன் 2 ஓடிடி வெளியீடு தொடர்பாக...
நடிகை சுரபி பிரதான பாத்திரத்தில் நடித்துள்ள பவித்ரம் இணையத் தொடரின் 2 ஆம் பாகம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
பவித்ரம் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தின் கதையின் தொடர்ச்சியாக, இரண்டாம் பாகத்தின் கதை அமைந்துள்ளது.
கர்ப்பிணியான வேதா(சுரபி), தனது கணவர் விக்ரமுக்கு(ஸ்ரீகாந்த் சசிகுமார்) ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தில்லியில் தலைமறைவாக வாழ வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
Advertisement
Advertisement
மருத்துவமனையில் உள்ள நம்பிக்கைக்குரிய நண்பர்களின் உதவியுடன், தனது குழந்தையை பெற்றெடுக்க, எதிரிகளிடமிருந்து வரும் ஆபத்தான சவால்களை அவர் எவ்வாறு எதிர்கொள்கிறார் என்பதே மையப்படுத்தி இந்தத் தொடர் எடுக்கப்படுகிறது.
சுனில் காரியாட்டுக்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த இனையத் தொடர், ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.
திரைப்படங்களில் நடித்து வந்த சுரபி, இந்த இணையத் தொடரின் மூலம் சின்ன திரையில் அறிமுகமாகி, தன்னுடைய ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
Season 2 of the web series Pavithram, starring actress Surabhi in the lead role, has been released on OTT.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.