நடிகர்கள் கார்த்தி, விக்ரமுக்கு தேசிய விருது இல்லையா?ஆதங்கப்படும் ரசிகர்கள்!
தேசிய விருதுகள் குறித்து ரசிகர்கள் கருத்து...
நடிகர்கள் கார்த்தி, விக்ரமுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்திருக்க வேண்டும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
2024 ஆம் ஆண்டு வெளியான இந்திய திரைப்படங்களுக்கான 72-வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் நடிகர் தனுஷ் இயக்கி, நடித்த ராயன் படத்துக்கு சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான தேசிய விருதும் மெய்யழகன் திரைப்படத்தின் ஒலிக்கலவைக்காக சுரேன். ஜி என்பவருக்கும் தேசிய விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரம், 2024-ல் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற தமிழ்ப்படங்களான லப்பர் பந்து, கொட்டுக்காளி, வாழை, தங்கலான் ஆகிய திரைப்படங்களுக்கு எந்த விருதும் கிடைக்காதது வருத்தம் அளிப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Advertisement
Advertisement
மேலும், தங்கலானில் மிகக் கடினமான நிலக்காட்சிகளில் நடித்த விக்ரம், மெய்யழகனில் உணர்வுப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்திய கார்த்தி ஆகியோருக்கு சிறந்த நடிப்பிற்கான விருதைக் கொடுத்திருக்கலாம் என்றும் ரசிகர்கள் ஆதங்கத்தைப் பதிவு செய்துள்ளனர்.
Fans are expressing the view that actors Karthi and Vikram should have received the National Award for Best Actor.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.