FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

நடிகர் சூரியின் அட்டகாசமான நடனம்! மண்டாடி பாடல் வெளியீடு!

நடிகர் சூரியின் மண்டாடி பாடல் வெளியானது...

Updated On : 19 ஜூலை 2026, 2:06 pm IST
பகிர்:

நடிகர் சூரி நடிப்பில் உருவான மண்டாடி திரைப்படத்தின் புதிய பாடல் வெளியாகியுள்ளது.

தமிழ்த் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகர்களுள் ஒருவராகயிருந்த நடிகர் சூரி, கடந்த சில ஆண்டுகளாகக் கதாநாயகனாக நடித்து வருகிறார். வணிக ரீதியாகவும் சில கோடிகளையும் ஈட்டும் நடிகராக மாறிவிட்டதால் பெரிய தயாரிப்பு நிறுவனங்களும் சூரியை வைத்து தயாரிக்க ஆர்வம் காட்டி வருகின்றன.

தற்போது, சூரி நாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் “மண்டாடி”. இப்படத்தை, இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ளார்.

Advertisement

Advertisement

நாகை பகுதி மீனவர்களின் வாழ்வியலையும் அங்கு நடைபெறும் படகுப் போட்டிகளையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார். இந்த நிலையில், ‘மண்டாடி மண்டாடி’ என்கிற பாடலை வெளியிட்டுள்ளனர்.

வகீசன் ராசய்யா எழுதிய இப்பாடலை அவரும் வி.எம். மகாலிங்கமும் இணைந்து பாடியுள்ளனர். மேலும், இதில் நடிகர் சூரி மிகச்சிறப்பாக நடனமாடியுள்ளதால் ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.

A new song from the movie Mandadi, starring actor Soori, has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments