FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

ஐசியு, அறுவைச் சிகிச்சை... மெஸ்ஸியின் தோல்விக்கு எழுதியதாக அமிதாப் பச்சன் விளக்கம்!

பாலிவுட்டின் மூத்த நடிகர் அமிதாப் பச்சன் தனது முந்தைய பதிவுகளுக்கு விளக்கம் அளித்துள்ளது பற்றி...

Updated On : 22 ஜூலை 2026, 6:42 pm IST
அமிதாப் பச்சன், மெஸ்ஸி. - படங்கள்: எக்ஸ் / அமிதாப் பச்சன், ஏபி.
பகிர்:

பாலிவுட்டின் மூத்த நடிகர் அமிதாப் பச்சன் தனது முந்தைய பதிவுகளுக்கு விளக்கம் அளித்துள்ளதுள்ளார். அதில் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது பற்றி தெளிவாக விளக்கம் அளித்துள்ளார்.

அறுவைச் சிகிச்சை, ஐசியு, மருத்துவமனை என்றெல்லாம் குறிப்பிட்டது ஆர்ஜென்டீனா, மெஸ்ஸியின் தோல்விக்கு எழுதப்பட்டதென்றும் தான் உடல் நலத்துடன் இருப்பதாகவும் புதிய பதிவில் விளக்கம் அளித்துள்ளார்.

மும்பையில் வசித்துவரும் அமிதாப் பச்சன் தனது தனிப்பட்ட வலைதள பக்கத்தில் கடந்த ஜூலை 21ஆம் தேதி அதிகாலை 2.58 மணிக்கு ஒரு பதிவிட்டிருந்தார். அதில், “மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை, ஐசியு, மருத்துவர்களால் பாதுகாப்பாக பார்த்துக்கொள்ளப்பட்டு டிஸ்சார்ஸ் ஆகி வீட்டுக்கு வந்தேன்” எனக் கூறியிருந்தார்.

Advertisement

Advertisement

மேலும் அதில், “வீட்டுக்கு திரும்புவது மிகுந்த கடினமான பகுதி. உடல் ரீதியாக, மன ரீதியாக... நீங்கள் மதிப்பிற்குரிய சாம்பியன். ஒருநாள் தோல்வி உங்களைப் பார்க்கும். இது உங்களின் மோசமான பகுதி” என்றெல்லாம் பதிவிட்டிருந்தார். இதனைப் பார்த்த பலரும் அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகப் புரிந்துகொண்டனர்.

இந்த நிலையில், அமிதாப் பச்சன் இதற்கு விளக்கம் அளித்து பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

நான் நலமாக இருக்கிறேன். பதிவு தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது. நான் உதாரணத்தைக் கொடுத்திருந்தேன்.

அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு அல்லது ஐசியுவில் இருந்து வீடு திரும்புவது போல ஒரு சூழ்நிலை. உடைந்த நிலையில் நீங்கள் உங்களைப் பார்த்துக்கொள்ள வேண்டும். அதனால், சாம்பியன் தோல்வியுற்றால் அது மோசமான நேரமாக இருக்கும். ஆர்ஜென்டீனா தோற்றது, அதனால் மெஸ்ஸி சாம்பியனாகத் தோல்வியுற்றார்.

அதுதான் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது. ஒவ்வொரு சாம்பியனும் அந்த நேரத்தில் எப்படி உணர்ந்திருப்பார்கள் என்று இன்னொரு சாம்பியனுக்குத் தெரிந்திருக்க வேண்டும். நமது இடத்தை வேறு ஒருவர் பிடித்துவிட்டார் என்பது சாம்பியனுக்கு கடினமாக இருக்கும். ஆனால், அதுதான் வாழ்க்கை. அது எப்போதும் அப்படித்தான் இருக்கும்.

அறுவைச் சிகிச்சை முடித்துவிட்டு வருவதுபோல சாம்பியனுக்கு அந்த தோல்வி இருந்திருக்கும். மீண்டும் உடலை தயார் செய்வதுபோல அவனுக்கும் இருக்கும் எனப் பதிவில் கூறியுள்ளார்.

summary

ICU, surgery... Amitabh Bachchan clarifies post regarding Messi's defeat!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments