நடிப்புக்கு ஓய்வா? ஊடகங்களை விமர்சித்த அமிதாப் பச்சன்!
நடிகர் அமிதாப் பச்சன் தனது ஓய்வு குறித்து கூறியிருப்பதாவது...
மூத்த பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் (83 வயது) தனது ஓய்வு குறித்த சர்ச்சைக்கு தன்னிலை விளக்கம் அளித்துள்ளார்.
பாலிவுட்டில் தனது நடிப்புக்காக மிகவும் பாராட்டுகளைப் பெற்ற அமிதாப் பச்சன் சுமார் 200 திரைப்படங்களுக்கு அதிகமாக நடித்துள்ளார். இதுவரை ஐந்து தேசிய விருதுகளை வென்றுள்ளார்.
கடைசியாக அமிதாப் பச்சன் நடிப்பில் வேட்டையன் திரைப்படம் 2024ல் வெளியானது. 2025ல் வெளியான 120 பகதூர் படத்தில் வாய்ஸ் ஓவர் அளித்திருந்தார். அடுத்ததாக கல்கி 2 படத்தில் நடிக்கவிருக்கிறார்.
Advertisement
Advertisement
அமிதாப் பச்சன் தனது வலைதளத்தில் தினமும் எழுதிக்கொண்டு வருகிறார். அதில் அவர் பதிவிட்ட பலருக்கும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. அதில், ”தாமதம் ஆகிவிட்டது; ஓய்வெடுக்க (retire) நேரம் வந்துவிட்டது” எனப் பதிவிட்டிருந்தார்.
சில செய்தித்தாள்களில் அவர் திரைப்படத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக செய்திகள் வெளியிட்டிருந்தன. அதனைப் பகிர்ந்த அமிதாப் பச்சன் விளக்கம் அளித்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
நான் வலைதளத்தில் ‘தாமதம் ஆகிவிட்டது; ஓய்வெடுக்க (retire) நேரம் வந்துவிட்டது’ என எழுதி இருந்தேன். அதாவது நேரம் அதிகமாகிவிட்டதால் ஓய்வெடுக்க செல்ல வேண்டும் என்று எழுதி இருந்தேன். ஆனால். இந்த ஊடகங்கள் - நாட்டின் மனசாட்சி- உயர்தரமான தகவல் கொடுப்பவர் தவறாகப் புரிந்துகொண்டது. இல்லை சார், நான் திரைப்பட நடிப்பில் இருந்து ஓய்வு பெறவில்லை. ஆங்கிலத்தில் retire என்றால் தூங்கச் செல்வது என்ற பொருளும் இருக்கிறது எனக் கூறியுள்ளார்.
அடுத்ததாக அமிதாப் பச்சன் ’செக்சன் 84’ திரைப்படத்திலும் நடிக்கிறார். இதனை ரிபு தாஸ்குப்தா இயக்குகிறார். அடுத்தாதாக கல்கி 2 படத்திலும் நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.
Amitabh Bachchan slams retirement rumours
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.