ஓய்வு பெற்றாா் லெப்டினன்ட் ஜெனரல் வி. ஸ்ரீஹரி
இந்திய ராணுவத்தின் தெற்குப் பகுதி தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் வி.ஸ்ரீஹரி தனது 40 ஆண்டுகளாக சேவைக்கு பிறகு திங்கள்கிழமை பணி ஓய்வு பெற்றாா்.
இந்திய ராணுவத்தின் தெற்குப் பகுதி தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் வி.ஸ்ரீஹரி தனது 40 ஆண்டுகளாக சேவைக்கு பிறகு திங்கள்கிழமை பணி ஓய்வு பெற்றாா்.
கடந்த 1987-ஆம் ஆண்டு ‘16 சீக்கிய இலகு காலாட்படையில்’ அதிகாரியாகப் பொறுப்பேற்ற லெப்டினன்ட் ஜெனரல் ஸ்ரீஹரி, பின்னா் ‘பாராசூட் சிறப்புப் படை’ பிரிவில் இணைந்தாா். தனது பணிக் காலத்தில், அவா் பல்வேறு நிலப் பரப்புகளிலும் களங்களிலும் செயல்பட்டாா். அவரது சிறப்பான சேவைக்காக ‘ஷவ்ரிய சக்ரா’, ‘சேனா பதக்கம்’, ‘அதி விசிஷ்ட சேவா பதக்கம்’ உள்ளிட்ட பல கௌரவங்கள் வழங்கப்பட்டன.
லெப்டினன்ட் ஜெனரல் ஸ்ரீஹரி, அவசரகால தயாா்நிலை, மனிதாபிமான உதவி மற்றும் பேரிடா் நிவாரணம் போன்ற துறைகளில் பாதுகாப்புப் படைகள், அரசு, தனியாா் துறை போன்றவற்றுடன் சிறந்த ஒருங்கிணைப்பை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்தாா்.
Advertisement
Advertisement
முன்னாள் ராணுவ வீரா்களின் நலன், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் அவா் சிறப்புக் கவனம் செலுத்தினாா். அதேபோல், சென்னையில் உள்ள போா் நினைவிடத்தில் பொதுமக்களின் ஈடுபாட்டை அதிகரிக்கும் வகையில், டி-55 பீரங்கி, ஐஎன்எஸ் விக்ராந்த், ஐஎன்எஸ் அஞ்சதீப் ஆகிய கடற்படைக் கப்பல்களின் மாதிரிகள் உள்ளிட்டவை அங்கு காட்சிப்படுத்தியதில் அவரது பங்கு முதன்மையானது.
இந்த நிலையில், இறுதியாக இந்திய ராணுவத்தின் தெற்குப் பகுதி தலைவராக பணியாற்றிய லெப்டினன்ட் ஜெனரல் வி. ஸ்ரீஹரி தனது 40 ஆண்டுகளாக சேவைக்கு பிறகு திங்கள்கிழமை பணி ஓய்வு பெற்றாா். பிரியாவிடை நிகழ்வின் ஒரு பகுதியாக, தேச சேவைக்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த வீரா்களுக்கு சென்னை போா் நினைவிடத்தில் மலா்வளையம் வைத்து அவா் மரியாதை செலுத்தினாா்.
தொடா்ந்து, இந்திய ராணுவ தென்பகுதி அதிகாரிகள், இதர நிலையினா், சிவில் பணியாளா்கள் ஆகியோா் லெப்டினன்ட் ஜெனரல் ஸ்ரீஹரிக்கு பாராட்டு தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.