நடிகரான இயக்குநர் - பியார் பிரேம கல்யாணம் வெளியீட்டுத் தேதி!
நடிகரான இயக்குநர் இளன்...
இயக்குநர் இளன் கதாநாயகனாக அறிமுகமாகவும் திரைப்படத்திற்கு பியார் பிரேம கல்யாணம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
தமிழில், பியார் பிரேம காதல் மற்றும் ஸ்டார் ஆகிய திரைப்படங்களை இயக்கி கவனம் பெற்றவர் இளன். ஸ்டார் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வணிக ரீதியாக வெற்றிப்படமானது.
தொடர்ந்து, இளன் கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படத்தின் பணிகளை மேற்கொண்டார்.
Advertisement
Advertisement
தற்போது, பியார் பிரேம கல்யாணம் எனப் பெயரிடப்பட்ட இப்படம் ஆக. 21 ஆம் தேதி நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், நாயகியாக நடிகை சான்வி மேக்னா நடிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
The film marking director Elan's debut as a lead actor has been titled Pyaar Prema Kaadhal.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.