கட்டா குஸ்தி - 2! இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! (ஜூலை 31 - ஆகஸ்ட் 6)
இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் குறித்து...
ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள், இணையத் தொடர்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.
கட்டா குஸ்தி - 2
நடிகர் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் கடந்த ஜூலை 3 ஆம் தேதி வெளியான படம் கட்டா குஸ்தி - 2. இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கிய இப்படத்தை வேல்ஸ் ஃபில்ம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருந்தது.
இந்தத் திரைப்படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஜூலை 31 ஆம் தேதி பார்க்கலாம்.
Advertisement
Advertisement
சின்ன சின்ன ஆசை
நடிகர்கள் இந்திரன்ஸ், மதுபாலா மற்றும் அபர்ணா பாலமுரளி ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடித்து வெளியான திரைப்படம் 'சின்ன சின்ன ஆசை'.
இந்தத் திரைப்படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் மற்றும் ஆஹா ஓடிடி தளங்களில் பார்க்கலாம்.
பாலன் தி பாய்
இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் வெளியான பாலன் தி பாய் திரைப்படத்தில், முக்கிய கதாபாத்திரங்களில் ஆதிசேஷன், ஃபர்ஹானா பளதிங்கள் நடித்துள்ளனர்.
சஸ்பென்ஸ் த்ரில்லர் பாணியில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம், ஜூலை 31 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
லவ் ஓ லவ்
மகேஷ் ராஜேந்திரன் இயக்கத்தில் பவிஷ், நாக துர்கா நடிப்பில் வெளியான திரைப்படம் லவ் ஓ லவ். மேலும் இந்தப் படத்தில், கே.எஸ். ரவிக்குமார், செல்வராகவன், வனிதா விஜயகுமார், ரம்யா, ஆதித்யா கதிர் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தத் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் ஜூலை 31 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
ஹார்ட் பீட் - 3
தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில் டெலி ஃபேக்ட்ரி நிறுவனம் தயாரித்து வரும் ஹார்ட் பீட் இணையத் தொடரின் 3வது சீசன் ஜூலை 30 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகவுள்ளது.
முந்தைய சீசன்களில் நடித்த நடிகை அனுமோள், கார்த்திக் குமார், தீபா பாலு, தாபா, சாருகேஷ், சபரிஷ் உள்ளிட்டோர் மூன்றாம் பாகத்திலும் நடிக்கிறார்கள்.
ஹாய் ஜவானி தோ இஷ்க் ஹோனா ஹை
ஹாய் ஜவானி தோ இஷ்க் ஹோனா ஹை திரைப்படம் ஜூலை 31 ஆம் தேதி ஜீ5 ஓடிடியில் வெளியாகிறது.
இந்தப் படத்தின் பிரதான பாத்திரங்களில் வருண் தவான், மிருணாள் தாகூர், பூஜா ஹெக்டே ஆகியோர் நடித்திருந்தனர். இந்தப் படத்தை வருண் தவானின் தந்தையும் இயக்குநருமான டேவிட் தவான் இயக்கியிருந்தார்.
ராவ் பகதூர்
சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படமாக எடுக்கப்பட்டுள்ள ராவ் பகதூர் படத்தில் நடிகர் சத்யதேவ் பிரதான பாத்திரத்தில் நடித்துள்ளார்.
வெங்கடேஷ் மஹா எழுதி, இயக்கியுள்ள இந்தப் படம், ஜூலை 31 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ளது.
பைத்தலாட்டம்
விபின் என். வேலாயுதன் இயக்கத்தில் தன்யா அனன்யா, மிதுன் சம்பு, ஜெயன் சேர்தலா, சுனில் சுகதா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் பைத்தலாட்டம்.
இந்தத் திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் ஜூலை 31 ஆம் தேதி வெளியாகிறது.
கடந்த வார ஓடிடி (கான் சிட்டி)
பவர்ஹவுஸ் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படமாக அர்ஜுன் தாஸ் நாயகனாகவும் அன்னா பென் நாயகியாகவும் நடித்த கான் சிட்டி திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கிறது.
இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்க, ஷான் ரோல்டன் இசையமைத்திருந்தார்.
பள்ளிச்சட்டம்பி
மலையாள இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி மற்றும் நடிகர் டொவினோ தாமஸ் கூட்டணியில் வெளியான திரைப்படம் பள்ளிச்சட்டம்பி. நடிகை கயாது லோஹர் நாயகியாக நடித்திருந்தார்.
இந்தத் திரைப்படம் சோனி லைவ் ஓடிடியில் காணக் கிடைக்கிறது.
ஈகோ ராமன்
கணேசன் நாச்சிமுத்து இயக்கத்தில் சிபி புவனச்சந்திரன், கீர்த்தனா, மறைந்த நடிகர் ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ஈகோ ராமன்.
இந்தத் திரைப்படத்தை, அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் காணலாம்.
மைலாஞ்சி
அஜயன் பாலா இயக்கத்தில் ஸ்ரீராம் கார்த்திக், கிரிஷா குருப், யோகி பாபு, முனீஷ்காந்த், சிங்கம்புலி, தங்கதுரை உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் மைலாஞ்சி.
இந்தத் திரைப்படத்தை ஆஹா ஓடிடியில் காணலாம்.
சீக்ரெட் ஆப் கலிங்கா
சனீஷ் உன்னிகிருஷ்ணன் இயக்கத்தில் தியான் ஸ்ரீனிவாசன், அல்டாப் சலீம், ரியாஸ் கான், மாளவிகா மேனன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் சீக்ரெட் ஆஃப் கலிங்கா.
நகைச்சுவை, திகில் மற்றும் மர்மம் கலந்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம், சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.
Let take a look at which movies and web series are set to release on OTT platforms this week.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.