பிளாஸ்ட் வசூல் இவ்வளவா?
பிளாஸ்ட் திரைப்படத்திற்கு
பிளாஸ்ட் திரைப்படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அறிமுக இயக்குநர் சுபாஷ் கே. ராஜ் இயக்கத்தில் உருவான பிளாஸ்ட் திரைப்படத்தில் நடிகர்கள் அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்த ஆகியோர் நடித்துள்ளனர்.
முழுமையான ஆக்சன் திரைப்படமாக உருவான இதில் கராத்தே தெரிந்த அர்ஜுன் குடும்பம் எப்படி வில்லன்களுடன் மோதுகிறார்கள் என்பதை சுவாரஸ்யமாக எடுத்ததால் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
Advertisement
Advertisement
தற்போது, டிக்கெட் முன்பதிவுகள் அதிகரித்து வருவதால் அதிக திரைகள் இப்படத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
இப்படம் திரையிடப்பட்டுள்ள பெரும்பாலான திரைகள் ஹவுஸ்புல் காட்சிகளாக மாறி வருகின்றன. இதனால், வணிக ரீதியாகவும் இப்படம் வெற்றிப்படமாக மாறவுள்ளதால் படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர்.
இந்த நிலையில், இப்படம் தமிழகம் மட்டுமல்லாது தென்னிதியளவில் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் ரூ. 15 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வார இறுதிக்குள் பெரிய தொகையை ஈட்டலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
Information regarding the box office collections of the film Blast has been released.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.