ஜூலை 5-ல் காதலி கௌரி ஸ்பிராட்டை மணக்கிறார் ஆமிர் கான்?
பாலிவுட் நடிகர் ஆமிர் கான் மற்றும் கௌரி ஸ்பிராட் ஆகியோருக்கு வரும் ஜூலை 5 ஆம் தேதி திருமணம் நடைபெறுவதாகத் தகவல்...
பாலிவுட் நடிகர் ஆமிர் கான் மற்றும் அவரின் காதலி கௌரி ஸ்பிராட் ஆகியோருக்கு வரும் ஜூலை 5 ஆம் தேதி திருமணம் நடைபெறுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பாலிவுட் திரையுலகின் “மிஸ்டர் பெர்ஃபெக்ஷனிஸ்ட்” என அழைக்கப்படுபவர் நடிகர் ஆமிர் கான். இந்தியத் திரையுலகின் மிகவும் கவனிக்கப்படும் நடிகர்களுள் ஒருவரான இவர் தனது நீண்ட நாள் தோழியான கௌரி ஸ்பிராட்டை காதலித்து வருவதாக, அவரது 60 ஆவது பிறந்த நாளன்று அறிவித்தார்.
ஆமிர் கான் மற்றும் கௌரி ஸ்பிராட் இடையே 25 ஆண்டுகளுக்கும் மேலாக நட்புறவு இருந்து வந்த நிலையில், இருவரும் சமீபகாலமாகக் காதலித்து வருகின்றனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், ஆமிர் கான் மற்றும் கௌரி ஸ்பிராட் ஆகியோருக்கு வரும் ஜூலை 5 ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சிலர் முன்னிலையில் இருவரும் வீட்டிலேயே பதிவுத் திருமணம் செய்யவுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஏற்கெனவே, ரீனா தத்தா என்பவருடன் ஆமிர் கானுக்குத் திருமணம் நடைபெற்ற நிலையில், இருவரும் கடந்த 2002 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். இவர்கள், இருவருக்கும் பாலிவுட் நடிகர் ஜுனைத் மற்றும் இரா கான் ஆகிய 2 குழந்தைகள் உள்ளன.
இதையடுத்து, லாபட்டா லேடிஸ் படத்தின் இயக்குநர் கிரன் ராவ் உடன் ஆமிர் கானுக்கு 2 ஆவது முறையாகத் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து, இருவரும் கடந்த 2021 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். மேலும், இவர்களுக்கு, ஆசாத் ராவ் கான் எனும் மகன் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Reports have emerged that Aamir Khan and Gauri Sprat, are set to get married on July 5th.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.