ஜான்வி கபூர் மீது விழுந்த ராம் சரண் ரசிகர்!
பெத்தி நிகழ்வில் அதிர்ச்சியடைந்த ஜான்வி கபூர் குறித்து....
பெத்தி நிகழ்வில் நடிகை ஜான்வி கபூர் மீது விழுந்த ரசிகரால் அதிர்ச்சி ஏற்பட்டது.
இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் நடிகர் ராம் சரண் பெத்தியில் நடித்து முடித்துள்ளார். இப்படம் நாளை (ஜூன் 4) வெளியாகிறது. இதற்கான புரமோஷன்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், நேற்று (ஜூன் 2) விஜயவாடாவில் நடைபெற்ற படத்தின் நிகழ்வில் ராம் சரண், ஜான்வி கபூர் உள்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர். அப்போது, திடீரென ரசிகர் ஒருவர் ராம் சரணை நோக்கி விரைவாக வந்தார். இதனைக் கவனித்த ராம் சரண் பாதுகாவலர் ஒரே ஆளாக அந்த நபரைத் தூக்கிச் சென்று வெளியே விட்டார்.
Advertisement
Advertisement
அதற்கு முன், அந்த ரசிகர் ராம் சரணை நெருங்கும்போது அருகே அமர்ந்திருந்த ஜான்வி கபூர் மீது விழுந்து, அவரின் இருக்கையை உந்த அது பின்னால் சாய்ந்தது. அந்த அழுத்தத்தில் ஜான்வி கபூர் கீழே விழுந்திருப்பார். ஆனால், நல்வாய்ப்பாக காவலர் ஒருவர் இருக்கையைப் பிடித்து சமநிலைப்படுத்தினார். எதிர்பாராத இந்தச் சம்பவத்தால் அதிர்ச்சியில் ஜான்வி கபூர் தன் நெஞ்சைப் பிடிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
A shocking incident occurred at an event when a fan fell onto actress Janhvi Kapoor.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.