முகப்பு
செய்திகள்

சிம்புவின் பயணம்: காலவரிசை 2021ன் டிரைலர்!

நடிகர் சிம்புவின் 2021 காலகட்டத்தில் எடுக்கப்பட்ட காட்சிகளின் டிரைலர் விடியோ குறித்து...

Updated On : 3 ஜூன் 2026, 7:59 pm IST
சிம்புவின் பயணம்: 2021 காலவரிசையின் போஸ்டர். - படம்: யூடியூப் / சிலம்பரசன் டிஆர்.
பகிர்:

நடிகர் சிம்புவின் ’ஜார்னி ஆஃப் அட்மேன் டைம்லைன் 2021’ என்ற பயணத்தின் டிரைலர் விடியோ வெளியாகியுள்ளது.

நடிகர் சிம்பு கடந்த 2020க்கு முன்பாக சில ஆண்டுகள் படங்கள் நடிக்காமலும் அதிக எடையுடனும் இருந்தார். அந்தக் கடினமான காலங்களைக் கடந்து 2021ல் கம்பேக் அளித்தார்.

இந்தப் பயணத்தை முன்னிட்டு இதுவரை 2020ல் நடந்த மாற்றங்கள் குறித்து நான்கு எபிசோடுகள் அடங்கிய விடியோவை தனது யூடியூப் பக்கத்தில் சிம்பு வெளியிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

தற்போது, 2021ஆம் ஆண்டு எடுத்த விடியோக்களின் தொகுப்பை டிரைலராக வெளியிட்டுள்ளார். இந்த விடியோவில் பெரும்பாலும் மாநாடு படத்தின் படப்பிடிப்பில் அவர் அனுபவித்த கஷ்டங்கள், இன்பம், உடல் மற்றும் மன ரீதியான மாற்றங்கள் குறித்து பேசியுள்ளார்.

நடிகர் சிம்பு 2020ல் 105 கிலோ எடையிலிருந்து 72 எடை கிலோவிற்கு மாற்றமடைந்தார். பின்னர் 51 கிலோவிற்கு மாறினார்.

உடற்பயிற்சி, விளையாட்டு, கடினமான உணவுக் கட்டுப்பாடு, ஒழுக்கத்தின் மூலமாக தனது உடலை கட்டுக்குள் கொண்டுவந்தார். தற்போது, சிம்பு அரசன் படத்தில் வெற்றிமாறன் படத்தில் நடித்து வருகிறார்.

வட சென்னை உலகில் உருவாகும் அரசன் திரைப்படம் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகலாம் என எதிர்பார்க்கபடுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.