FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

சிக்மா படத்தின் முதல் பாடலை வெளியிடும் துல்கர் சல்மான்!

ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள சிக்மா படத்தின் முதல் பாடல் குறித்து...

Updated On : 4 ஜூன் 2026, 11:26 am IST
துல்கர் சல்மான். - படம்: எக்ஸ் / லைகா புரடக்‌ஷன்ஸ்.
பகிர்:

ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள சிக்மா திரைப்படத்தின் முதல் பாடலை துல்கர் சல்மான் வெளியிடுவதாக படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜேசன் சஞ்சய் முதல்முறையாக இயக்குநராக சிக்மா படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். இப்படத்தை லைகா மற்றும் ஜேஎஸ்ஜே மீடியா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.

நாயகனாக சந்தீப் கிஷன் நடித்துள்ளார். முதல்வர் விஜய்யின் தீவிர ரசிகரான இசையமைப்பாளர் தமன் இசையமைப்பில் இப்படம் உருவாகிறது.

Advertisement

Advertisement

இந்தப் படத்தில் ஃபரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், அன்பு தாசன், ஷீலா ராஜ்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள்.

ஆக்‌ஷன் திரைப்படமான சிக்மா வரும் ஜூலை 31ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்த நிலையில், முதல் பாடல் இன்று மாலை துல்கர் சல்மான் வெளியிடுவாரெனக் கூறப்பட்டுள்ளது.

summary

Dulquer Salmaan to release the first song from the movie 'Sigma'!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments