FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

துல்கர் சல்மான் - பூஜா ஹெக்டே படத்தின் பெயர் அறிவிப்பு!

நடிகர் துல்கர் சல்மான் நாயகனாக நடிக்கும் 41 ஆவது திரைப்படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது...

Updated On : 10 ஜூலை 2026, 10:41 am IST
ஸ்ரீ ஸ்ரீ படத்தின் முதல் பார்வை போஸ்டர்... - Instagram
பகிர்:

நடிகர் துல்கர் சல்மான் நாயகனாக நடிக்கும் 41 ஆவது திரைப்படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளின் திரையுலகிலும் முன்னணி நடிகராக உருவெடுத்துள்ள துல்கர் சல்மானின் திரைப்படங்கள் சமீபகாலமாக பெரும் பேசுபொருளாகி வருகின்றன.

மொழிகளைக் கடந்து ரசிகர்களின் ஆதரவைப் பெற்றுள்ள நடிகர் துல்கர் சல்மான் மற்றும் நடிகை பூஜா ஹெக்டே இணைந்து இயக்குநர் ரவி நெலகுதிதி இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் நடித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகி வரும் இந்தப் புதிய படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்கின்றார்.

இந்த நிலையில், நடிகர் துல்கர் சல்மான் நாயகனாக நடிக்கும் 41 ஆவது திரைப்படத்திற்கு “ஸ்ரீ ஸ்ரீ” எனப் பெயரிடப்பட்டுள்ளதாகப் படக்குழுவினர் இன்று (ஜூலை 10) அறிவித்துள்ளனர். மேலும், கடந்த சில நாள்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் கிளிம்ஸ் விடியோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

ஏற்கெனவே, ஓணம் வெளியீடாக துல்கர் சல்மான் நடித்த “ஐயம் கேம்” திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், “ஸ்ரீ ஸ்ரீ” படத்தின் புதிய அப்டேட்-களால் துல்கரின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

summary

The title of actor Dulquer Salmaan's 41st film has been announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments