மஞ்ஞுமல் பாய்ஸ் இயக்குநரின் புதிய படைப்பு! பாலன் தி பாய் பட டிரைலர்!
பாலன் தி பாய் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது...
மஞ்ஞுமல் பாய்ஸ் பட இயக்குநர் சிதம்பரத்தின் இயக்கத்தில் உருவாகியுள்ள “பாலன் தி பாய்” திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
இயக்குநர் சிதம்பரம் இயக்கி நடிகர்கள் சௌபின் சாஹிர், ஸ்ரீநாத் பாசி உள்ளிட்டோர் நடிப்பில், கடந்த 2024 ஆம் ஆண்டு வெளியான படம் “மஞ்ஞுமல் பாய்ஸ்”. இப்படம், மொழிகளைக் கடந்து மாபெரும் வெற்றி பெற்றதுடன் ரூ. 200 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.
இந்த நிலையில், இயக்குநர் சிதம்பரத்தின் இயக்கத்தில் “பாலன் தி பாய்” எனும் புதிய படம் உருவாகியுள்ளது. நடிகர் ஃபகத் ஃபாசில் நடிப்பில் வெளியான “ஆவேஷம்” பட இயக்குநர் ஜித்து மாதவன் இப்படத்துக்கு கதை எழுதியுள்ளார்.
Advertisement
Advertisement
காவல் துறையிடம் இருந்து தப்பித்து வெவ்வேறு பெயர்களில் மறைந்து வாழும் 10 வயது சிறுவனையும் அவனது தாய்யையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள “பாலன் தி பாய்” படத்தின் டிரைலர் இன்று (ஜூன் 5) படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது.
கேவிஎன் புரொடெக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் சுஷின் ஷியாம் இசையமைத்துள்ளார். மேலும், இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
The trailer for the film "Balan the Boy," directed by Chidambaram has been released.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.