2 நாளில் ரூ.200 கோடியை நெருங்கிய ராம் சரணின் பெத்தி படத்தின் வசூல்!
ஆச்சரியமளிக்கும் ராம் சரண் நடித்துள்ள பெத்தி திரைப்படத்தின் வசூல் குறித்து...
நடிகர் ராம் சரண் நடிப்பில் வெளியாகிய பெத்தி திரைப்படம் 2 நாளில் ரூ.200 கொடிக்கு அருகில் சென்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஜூன் 4ஆம் தேதி வெளியான பெத்தி படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் அசத்தி வருகிறது.
இந்தப் படத்தில் நடிகை ஜான்வி கபூர் காட்சிப்படுத்தியுள்ள விதம் மிகவும் ஆபாசமாக இருப்பதாகவும் கீழ்த்தரமாக இருப்பதாகவும் இணையவாசிகளும் ஜான்வியின் ரசிகர்களும் கடுமையான கண்டனத்தைப் பதிவிட்டு வந்தார்கள். அதனை ஏற்று இயக்குநரும் மன்னிப்பு கேட்டார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், படம் இரண்டு நாளில் உலகம் முழுவதும் ரூ.181.8 கோடி வசூலித்துள்ளதாக மைத்ரி மூவி மேக்கர்ஸ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தப் படத்தில் ஷிவ ராஜ்குமார், ஜகபதி பாபு, ரவி கிஷன், விஜய் சந்திரசேகர், ஜான் விஜய் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
நடிகை ஸ்ருதி ஹாசன் இந்தப் படத்தில் ஒரு பாடலுக்கு சிறப்பு நடனமாடியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
'Peddi' box office collection nears ₹200 crore in 2 days!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.