தேர்தலில் போட்டியிடும் நடிகர்கள்!
தேர்தலில் போட்டியிடும் நடிகர்கள் குறித்து...
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் இம்முறையும் பிரபல நடிகர்கள் போட்டியிடுகின்றனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் இடையே நான்கு முனைப் போட்டி நிலவுகிறது.
வேட்பு மனுத்தாக்கல்களும் துவங்கியுள்ளதால் இனி பரப்புரைகளும் தேர்தல் பிரசாரமும் தீவிரமடைய உள்ளது.
Advertisement
Advertisement
இத்தேர்தலில் நடிகர் விஜய் தன்னுடைய தவெக கட்சியுடன் களம் இறங்குகிறார். இதுதான் இவரது முதல் தேர்தல் என்பதால் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
விஜய்யைப் போன்று, நடிகர்களான உதயநிதி ஸ்டாலின் திமுக சார்பாக சேப்பாக்கத்திலும், கருணாஸ் ( சிவகங்கை - முக்குலத்தோர் புலிப்படை), சுந்தர் சி (மதுரை மத்திய - புதிய நீதிக்கட்சி), ஸ்ரீநாத் (தூத்துக்குடி - தவெக), ராஜ்மோகன் (எழும்பூர் - தவெக) ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
மேலும் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் காரைக்குடியிலும், நடிகர் மன்சூர் அலிகான் லால்குடி தொகுதியிலும் களம் காண்கின்றனர்.
கேரளத்தில் நடிகைகள் அஞ்சலி நாயர், லட்சுமி பிரியா, வீணா நாயர் உள்ளிட்டோர் டிவெண்டி 20 என்கிற கட்சியை தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இணைத்து பாஜக வேட்பாளராக தேர்தலைச் சந்திக்கின்றனர்.
vijay, udhayanidhi, sundar c actors turn politicians contests in this tn assembly election 2026
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.