முகப்பு
செய்திகள்

இது ஆர். பி. சௌத்ரி போட்ட பிச்சை... கண்கலங்கிய விக்ரமன்!

ஆர். பி. சௌத்ரி குறித்து விக்ரமன்...

ஆர். பி. சௌத்ரி, விக்ரமன்
பகிர்:

தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி மறைவுக்கு இயக்குநர் விக்ரமன் விடியோ வெளியிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.

சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 99 திரைப்படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பாளர் ஆர். பி. சௌத்ரி சாலை ராஜஸ்தானில் விபத்தில் காலமானது திரைத்துறையினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு சிறந்த பங்களிப்பைச் செய்த தயாரிப்பாளர் என்பதால் பலரும் தங்கள் இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், இயக்குநர் விக்ரமன் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “40 ஆண்டுகளுக்கு முன் இயக்குநராகும் ஆசையில் சென்னை வந்து ஏகப்பட்ட கஷ்டங்களை எதிர்கொண்டேன். உதவி இயக்குநராக பசியுடன் அலைந்துகொண்டிருந்த போது, புது வசந்தம் படத்தைத் தயாரித்து என்னை இயக்குநர் ஆக்கினார். என் வீட்டுக்கும் புது வசந்தம் என்றே பெயரிட்டுள்ளேன். நான் இன்று நிம்மதியாக சாப்பிடுகிறேன் என்றால் அது தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி போட்ட பிச்சை. அவரின் மறைவை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 99 திரைப்படங்களைத் தயாரித்தவர் 100-வது படத்தின் தயாரிப்பைப் பார்க்காமல் சென்றுவிட்டாரே என நினைக்கும்போது வேதனையாக இருக்கிறது” எனக் கண்கலங்க பேசியுள்ளார்.

Director Vikraman released a video expressing his condolences for the passing of producer R.b. Choudary.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments