FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

இயக்குநர் இளன் நாயகனாகும் பியார் பிரேமா கல்யாணம்! அறிமுக விடியோ!

பியார் பிரேமா கல்யாணம் திரைப்படத்தின் அறிமுக விடியோ வெளியிடப்பட்டுள்ளது குறித்து...

Updated On : 30 ஜூலை 2026, 5:46 pm IST
இளன், சான்வி மேக்னா
பகிர்:

இயக்குநர் இளன் நாயகனாக நடிக்கும் “பியார் பிரேமா கல்யாணம்” திரைப்படத்தின் அறிமுக விடியோ வெளியாகியுள்ளது.

பியார் பிரேம காதல் மற்றும் ஸ்டார் ஆகிய திரைப்படங்களை இயக்கி ரசிகர்களிடையே கவனம் பெற்றவர் இயக்குநர் இளன். இவரது படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வணிக ரீதியாக வெற்றி பெற்றுள்ளன.

இயக்குநர் இளன் இயக்கி நாயகனாக நடிக்கும் படத்துக்கு “பியார் பிரேமா கல்யாணம்” எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 21 ஆம் தேதி தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் நேரடியாக நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகின்றது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், ”பியார் பிரேமா கல்யாணம்” திரைப்படத்தின் கதாநாயகன் அறிமுக விடியோவை படக்குழு இன்று (ஜூலை 30) வெளியிட்டுள்ளது.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகும் இந்தப் படத்தில் நடிகர்கள் சான்வி மேக்னா, ராதிகா சரத்குமார், எம்.எஸ். பாஸ்கர், யோகி பாபு, கீதா கைலாசம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

summary

The introductory video for the film "Pyaar Prema Kaadhal," starring director Elan as the lead actor, has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments