பூஜா ஹெக்டேவின் கவர்ச்சியான புகைப்படங்களுக்கான காரணம் என்ன?
நடிகை பூஜா ஹெக்டேவின் வைரல் புகைப்படங்கள், விடியோ குறித்து...
நடிகை பூஜா ஹெக்டே தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்த கவர்ச்சியான புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தில் அறிமுகமான நடிகை பூஜா ஹெக்டே தமிழ், தெலுங்கு, ஹிந்தி என தற்போது பான் இந்திய நடிகையாக மாறியுள்ளார்.
கடைசியாக ரெட்ரோ படத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக, கூலி படத்தில் மோனிகா பாடலுக்கு நடனமாடியிருந்தார். ஜன நாயகன் படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.
Advertisement
Advertisement
தற்போது, காஞ்சனா 4, துல்கர் சல்மான் 41, ’ஹாய் ஜவானி டோ இஷ்க் ஹோனா ஹாய்’ என்ற ஹிந்தி படத்திலும் நடித்து வருகிறார். இந்த ஹிந்தி படத்தை வருண் தவானின் தந்தை டேவிட் தவான் இயக்கியுள்ளார்.
இந்த நிலையில், தனது இன்ஸ்டா பக்கத்தில் பூஜா ஹெக்டே கவர்ச்சியான புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். நேற்று (மே.8) ஹிந்திப் படத்தில் இருந்து ’டேரே ஹோ ஜான்’ என்ற பாடல் வெளியாகியுள்ளது.
இந்தப் பாடலில் அணிந்திருந்த புகைப்படங்களைத்தான் தற்போது பூஜா ஹெக்டே பகிர்ந்துள்ளார். இந்தப் பாடலை பாடியிருந்த ஜோனிடா காந்தி பூஜா ஹெக்டேவின் பதிவில், “ஹாட்டி” எனக் கமெண்ட் செய்துள்ளார்.
இந்தப் படம் ஜூன் மாதம் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
Hai Jawani Toh Ishq Hona Hai film Tera Ho Jaun pooja hegde viral song
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.